twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் 'தத்து அப்பா' பங்கேற்கும் 'பெருமாள் கோயில் உண்டசோறு'!

    By Shankar
    |

    பாலம் கல்யாணசுந்தரம்... இவரைத் தெரியாதவர்கள் ரொம்ப குறைவாகத்தான் இருப்பார்கள்.

    பணியில் இருந்து சம்பாதித்த சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தார். அவரது சேவையை பாராட்டி அமெரிக்கா பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்குக் கொடுத்து விட்டார்.

    Social activist Palam Kalyanasundaram to attend Perumal Kovil Undasoru audio launch

    இவரது உயரிய சமூக சேவையை கௌரவிக்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது அப்பாவாக தத்தெடுத்துக் கொண்டார்... அவருக்கு பணமும் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கினார். அதையெல்லாம் அப்படியே பாலம் அமைப்பிற்கு வழங்கி விட்டார். அப்படிப் பட்டவர் முதல் முறையாக ஒரு சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அடுத்த தலைமுறைக்கு நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான் என்பதை வலியுறுத்தும் பெருமாள் கோயில் உண்டசோறு என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாலம் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு இசையை வெளியிடுகிறார்.

    முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை எம்ஆர் தியேட்டர் - கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

    சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா என படத்தின் அத்தனை நடிகர் நடிகர்களும் புதுமுகங்களே.

    டிஜே ஒளிப்பதிவு செய்ய, ஆர் ஆர் கார்த்திக் - பாலபாரதி இசை அமைக்கின்றனர். எழுதி இயக்குகிறார் விடி ராஜா.

    படம் குறித்து இயக்குநர் விடி ராஜா கூறுகையில், "படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும். நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவைதான்.

    சுற்றுச் சூழலலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக்தான். இந்த கருத்தைத்தான் இந்தப் படத்தின் மூலம் சொல்கிறோம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாலம் அமைப்பின் கல்யாணசுந்தரத்தை அழைத்தோம். படம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டதும் வரச் சம்மதித்தார்.

    டிசம்பர் 1-ம் தேதி காலை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் கல்யாணசுந்தரம் முன்னிலையில் இயக்குனர் பேரரசு இசைத்தட்டை வெளியிட இயக்குனர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஜே.சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள்," என்றார்.

    English summary
    Social activist Palam Kalyanasundaram will attend Perumal Kovil Undasoru audio launch for the first time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X