twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்க விவகாரம்.... இப்போதைக்கு கட்டடத்தை ஆரம்பிக்கவே விடமாட்டாங்க!

    By Shankar
    |

    நடிகர் சங்க கட்டடத்தை இப்போதைக்கு ஆரம்பிக்க முடியாதபடி ஒரு தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துவிட்டது. காரணம் 33 அடி தெருவை ஆக்கிரமித்து கட்டட ப்ளான் வடிவமைக்கப்பட்டதுதான்.

    இந்த ஆக்கிரமிப்பு குறித்து இன்றல்ல... பல மாதங்களுக்கு முன்பே நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் கவனத்துக்கு பலரும் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் அலட்சியமாக, 'எல்லாம் வக்கீல் பாத்துப்பார்... நாங்க சட்டப்படிதான் செய்கிறோம்,' என்று கூறிவிட்டனர். அந்த அலட்சியத்தின் விளைவுதான் இந்தத் தடை என்கிறார்கள் இப்போதைய நிர்வாகத்துக்கு நெருக்கமான சிலர்.

    Some facts behind Ban on Nadigar Sangam Building

    சங்க கட்டடத்துக்கு அடித்தளம் அமைப்பதற்கு குழிகள் தோண்ட டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.

    உண்மையில் இந்த கட்டடம் அமைவதை அந்த ஏரியாவில் உள்ள முக்கியப் புள்ளிகள் சிலர் விரும்பவில்லையாம்.

    முன்பு சரத்குமார் தலைவராக இருந்த காலத்தில் சத்யம் சினிமாஸுடன் ஒப்பந்தம் போட்டு, 10 ஸ்கிரீன்கள் கொண்ட மல்டிப்ளெக்ஸ் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான அனைத்து வேலைகளையும் சத்யம் சினிமாஸ் மேற்கொண்டபோது, அந்தப் பகுதிவாசிகள் பெயரில் வழக்குப் போட்டு, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட வைத்தார்கள்.

    "இப்போது ஆக்கிரமிப்புக்காக வழக்குப் போட்டுத் தடுத்து வைத்துள்ளனர். இந்த 33 அடி தெரு விவகாரம் முடிவுக்கு வந்தாலும், இந்தக் கட்டடத்துக்கு எதிராக நிச்சயம் இன்னொரு வழக்குத் தொடர்வார்கள். அப்போது சுற்றுச்சூழலைக் கையில் எடுப்பார்கள். காரணம் அந்தப் பகுதியில் இப்படி ஒரு கட்டடம் வருவதையே அங்குள்ள முக்கியப் புள்ளி ஒருவர் விரும்பவில்லை," என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

    அப்போ விஷால் திருமண சபதம் அவ்ளோதானா?

    English summary
    Here are some facts behind the Ban on Nadigar Sangam Building
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X