»   »  நான் உயிரோடதான் இருக்கேன்!- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா

நான் உயிரோடதான் இருக்கேன்!- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா

Posted by:
Subscribe to Oneindia Tamil

விபத்தில் இறந்துவிட்டதாக வந்த தகவல்களை நம்ப வேண்டாம். நான் உயிரோடு இருக்கிறேன், என்று நடிகை சோனா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு இருக்கிற ஒரே கவர்ச்சி நடிகை சோனாதான்.

ஆனால் இவர் புதுச்சேரி அருகே காரில் அவர் சென்று கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் சோனா இறந்து போனதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. வாட்ஸ்ஆப்பில் முதலில் தகவல் வந்தது.

விளக்கம்

பின்னர் மற்ற சமூக வலைத் தளங்களிலும் பரவ ஆரம்பிக்க, விட்டால் நம்மை காலி பண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க போல என அதிர்ந்துபோய் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார் சோனா.

விருமாண்டியும் சிவனாண்டியும்

அதில், "நான் விருமாண்டியும் சிவனாண்டியும் என்ற படத்தில் மனோபாலா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. புதுச்சேரியில் தங்கி இருந்து இதில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

நலம் விசாரிக்கின்றனர்

இந்த நிலையில், நான் கார் விபத்தில் சிக்கி இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி இருக்கிறது. அதைப் பார்த்து நூற்றுக்கணக்கானோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி என்னிடம் உடல் நலம் விசாரித்தார்கள். என் நலனில் அக்கறை உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.

நிறைய சாதிக்க வேண்டி இருக்கு

விபத்து எதுவும் நடக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. அதுவரை எனக்கு எதுவும் நடக்காது. ரசிகர்கள் ஆதரவில் நன்றாகவே இருப்பேன்.''

இவ்வாறு சோனா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

 

English summary
Actress Sona has appeared in video today and confirmed she is live and safe.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos