» 

திரைத் துளி

பார்த்திபன், விக்னேஷ், உமா ஆகியோர் நடித்த சூரி படத்தை திரையிட சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

விஜயக்குமார்,சுரேஷ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் விக்னேஷ் ஹீரோ. உமாஹீரோயின். மேலும் பார்த்திபன், விஜயலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் முடியும் நிலையில் தயாரிப்பாளர்களான விஜயக்குமாருக்கும், சுரேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடுஏற்பட்டது. பணம் தொடர்பாக ஏற்பட்ட இந்தத் தகராறையடுத்து இருவருக்கும் இடையே சமரச முயற்சிகள்நடந்தன.

இதன்படி சுரேஷுக்கு ரூ. 13 லட்சத்தை விஜயக்குமார் தர வேண்டும் என்று முடிவானது. அதன்படி சுரேஷுக்கு ரூ.13 லட்சத்திற்கான காசோலைகளைக் கொடுத்தார் விஜயக்குமார்.

ஆனால் விஜயக்குமாரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலைகள் அனைத்தும் திரும்பி விட்டன.இதைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சூரி படத்தைத் திரையிடும் முயற்சிகளில் விஜயக்குமார்இறங்கினார்.

இதையறிந்த சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு சேர வேண்டிய பணம்கிடைக்கும் வரை படத்தைத் திரையிட விஜயக்குமாரை அனுமதிக்கக் கூடாது என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், மறு உத்தரவு வரும் வரை இந்தப் படத்தை திரையிட இடைக்காலத்தடை விதித்தார். மேலும், சுரேஷுக்குத் தர வேண்டிய பணத்தை உயர் நீதிமன்றத்தில் கட்டுமாறும்விஜயக்குமாருக்கு உத்தரவிட்டார்.

Read more about: ajith, amoga, artgallery, astrology, chennai, florals, kamal, kiran, kural, pooja, rajni, simran, sneha, vijay, vikram
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos