»   »  'அம்மா' மடியில் நான்: நடிகை ஸ்ரீதேவி உருக்கம்

'அம்மா' மடியில் நான்: நடிகை ஸ்ரீதேவி உருக்கம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜெயலலிதாவின் மடியில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை மிஸ் செய்வதாக நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைத்து திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். தாங்கள் ஜெயலலிதாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு அம்மாவை மிஸ் பண்ணுவதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கேயே செட்டிலான ஸ்ரீதேவியும் அம்மாவை மிஸ் பண்ணுகிறார். 1971ம் ஆண்டு வெளியான ஆதி பராசக்தி படத்தில் ஜெயலலிதா சக்தியாகவும், குழந்தை நட்சத்திரமான ஸ்ரீதேவி கார்த்திகேயனாகவும் நடித்தனர்.

அப்போது ஸ்ரீதேவி ஜெயலலிதாவின் மடியில் அமர்ந்திருக்கும்படி புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை ஸ்ரீதேவி ட்விட்டரில் வெளியிட்டு ஜெயலலிதாவை மிஸ் பண்ணுவதாக உருக்கமாக கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுடன் சேர்ந்து பணியாற்றிய தான் அதிர்ஷ்டசாலி என ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Sridevi is missing iron lady Jayalalithaa just like millions of people in Tamil Nadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos