»   »  "புலி" யைப் பார்க்கப் போய் இடைவேளை வரை "மயிலை"க் காணாமல் ஏமாந்த ரசிகர்கள்!

"புலி" யைப் பார்க்கப் போய் இடைவேளை வரை "மயிலை"க் காணாமல் ஏமாந்த ரசிகர்கள்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயின் புலி படத்தில் இடைவேளை வரை ஸ்ரீதேவியின் அறிமுகம் இல்லை என டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதி என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இவர்கள் தவிர படத்தில் முக்கிய வில்லியாக ஸ்ரீதேவி நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி தமிழில் நடித்துள்ள படம் இது. எனவே, விஜய் பட ரிலீஸ் என்பது போலவே, ஸ்ரீதேவி படம் என்றும் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


ஏமாற்றம்...

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரீதேவியை திரையில் தரிசிக்கலாம் என ஆர்வமாகச் சென்ற ரசிகர்களுக்கு புலியின் இடைவேளை வரை ஓடிய படம் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாம். காரணம் புலி பர்ஸ்ட் ஹாப்பில் ஸ்ரீதேவியின் காட்சிகளே இல்லையாம்.


 


 


ஆவல்...

இதனால், டிவிட்டரில் ரசிகர்கள் தங்களது ஏமாற்றத்தைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும், விஜயும், ஸ்ரீதேவியும் இணைந்து வரும் காட்சிகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


எதிர்பார்ப்பு...

நிச்சயமாக அந்தக் காட்சிகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.


வேதாள உலகம்...

அதேபோல், ஸ்ரீதேவி வாழும் கோட்டையின் பெயர் வேதாள உலகம் என்று ஒரு ரசிகர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் பெயர் வேதாளம் என்பது நினைவு கூரத்தக்கது.


English summary
Puli, starring Sridevi, Vijay, Hansika Motwani and Shruti Haasan, has now released in India and abroad. The release of Puli had hit a roadblock after early morning shows and overseas premieres of the film were cancelled reportedly due to payment issues.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos