»   »  பஞ்சாயத்து நடிகைகளே போதும் நிறுத்திக்கங்க: ஸ்ரீப்ரியா குமுறல்

பஞ்சாயத்து நடிகைகளே போதும் நிறுத்திக்கங்க: ஸ்ரீப்ரியா குமுறல்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சாயத்து நடிகைகளே போதும் நிறுத்திக் கொள்ளுங்கள் என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.

டிவி சேனல்களில் நடிகைகள் தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா குரல் எழுப்பியுள்ளார்.

அவருக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

போதும்

பஞ்சாயத்து நடிகைகளை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் படங்களில் சட்ட நிபுணர்களாகவும், கவுன்சிலிங் அளிப்பவர்களாகவும் இருக்கலாம். அது ரீல் இது ரியல் வாழ்க்கை.

டிஆர்பி

பஞ்சாயத்து நிகழ்ச்சிகளால் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும். சிலருக்கு அது அடுத்தவர் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்று.

பொறுப்பு

நாம் பொறுப்பான பெரியவர்களாக நடந்து இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்போம். அப்படி செய்தால் நீங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துவீர்கள்.

அப்பாவிகள்

டியர் ட்வீபிள்ஸ், உங்களுக்கு தெரிந்த அப்பாவிகளிடம் சொல்லுங்கள் அவர்களை சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என மற்றும் டிவி சேனல்களிடம் ஏமாற வேண்டாம் என கூறுங்கள்.

English summary
Senior actress Sripriya tweeted that, 'Requesting all panchayat actors 🙏enough,we could be law experts and counsellers effeciantly only in movies there r real ones for real life.'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos