»   »  நயன்தாரா, சிறுவன் ஜாலி முத்தத்தை போய் இப்படி பார்க்கும் அளவுக்கு தாழ்ந்துட்டோமா?: இயக்குனர்

நயன்தாரா, சிறுவன் ஜாலி முத்தத்தை போய் இப்படி பார்க்கும் அளவுக்கு தாழ்ந்துட்டோமா?: இயக்குனர்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சின்ன பையன் தனது ஆசிரியைக்கு முத்தம் கொடுப்பதை சரியான முறையில் எடுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நாம் உள்ளோம் என்று திருநாள் பட இயக்குனர் ராம்நாத் தெரிவித்துள்ளார்.

ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் திருநாள். படத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் நயன்தாராவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ராம்நாத் கூறுகையில்,

சென்சார்

அந்த முத்தக் காட்சி ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்தை தான் காட்டுகிறது. இந்த காட்சியை சென்சார் போர்டும் பார்த்து நீக்கவில்லை. ஜாலிக்காக எடுக்கப்பட்ட காட்சியில் கவனம் செலுத்தாமல் மக்கள் ஏன் கிளைமாக்ஸ் சொல்லும் கருத்தை பார்க்கக் கூடாது.

நயன்தாரா

முத்தக் காட்சி தவறு என்று நினைத்திருந்தால் நயன்தாராவே நடித்திருக்க மாட்டார். என் மகள் பள்ளியில் படிக்கிறாள். என் மகள் மற்றும் அவளின் தோழிகள் மூலம் எனக்கு குழந்தைகளின் மனநிலை தெரியும்.

இப்படியா?

அண்மை காலமாக சிலர் ஒரு படத்தில் வரும் அனைத்தையும் விமர்சிக்கிறார்கள். சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்குகிறார்கள். ஒரு சிறுவன் தனது ஆசிரியையை முத்தமிடுவதை சரியான பார்வையோடு பார்க்க முடியாத அளவுக்கு நாம் இறங்கிவந்துவிட்டோம்.

அடுத்த படம்

நயன்தாராவை பாவாடை, தாவணியில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று ராம்நாத் தெரிவித்துள்ளார்.

English summary
Thirunaal director Ramnath has cleared air about lip lock between a school boy and Nayanthara in his movie. He said that," We have stooped to the level that we can’t overlook a young boy kissing his teacher."
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos