twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அணையை மீட்கும் ரஜினி.... லிங்கா படத்தின் கதை இதுதானா?

    By Shankar
    |

    இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்றால் அது ரஜினி நடித்துள்ள லிங்கா என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது.

    இந்தப் படத்தின் மூலம் தன் தந்தைக்கு சமமான அண்ணன் சத்யநாராயணா மற்றும் சில நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே, ராக்லைன் வெங்கடேஷ் மூலம் லிங்காவைத் தயாரிக்கிறார் ரஜினி.

    இரண்டு ரஜினி

    இரண்டு ரஜினி

    படத்தில் ரஜினிக்கு இரட்டை வேடங்கள். ஒருவர் அணை கட்டும் இன்ஜினீயர். முறுக்கிய மீசை, கர்லிங் முடியுடன் பிரிட்டிஷ் கால இளைஞராக வருகிறார். இவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

    இன்னொரு ரஜினி இந்தக் கால இளைஞர். அவருக்கு நண்பராக சந்தானம். சன் கிளாஸ், ஸ்டைல் உடைகளுடன் கலக்கும் இவருக்கு ஜோடி அனுஷ்கா.

    இதுதான் கதை

    இதுதான் கதை

    50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. அதைப் போக்குவதற்காக கலெக்டராக இருக்கும் ரஜினி, தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறார். அப்போது சமூக விரோதக் கூட்டம் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது. எனக்கு இந்துவும் வேணாம், கிறித்தவரும் வேணாம். முஸ்லிமும் வேணாம். செட்டியார், முதலியார், நாடார் வேணாம். இந்தியனா இருக்குறவங்க மட்டும் என் கூட வாங்க என்று ரஜினி அறைகூவல் விடுக்கிறார். மக்கள் படை திரண்டு வருகிறது. அவர்களோடு இணைந்து அணை கட்டுகிறார்.

    அவமானம்

    அவமானம்

    நாட்டாமை விஜயகுமார் ரஜினியை நினைத்துப் பெருமைப்படுகிறார். அணை கட்டுவதற்கு உதவியாகவும், ரஜினிக்கு ஆறுதலாகவும் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா சந்தோஷத்தில் இருக்கும்போது அந்த விபரீதம் நடக்கிறது. ஆங்கிலேயருக்கு கைத்தடியாக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன், அணை திறப்பு விழாவிற்கு வரும் ரஜினியை அவமானப்படுத்துகிறார். இதனால், அணையைத் திறக்காமலேயே சென்றுவிடுகிறார் ரஜினி. ரஜினியுடன் சோனாக்‌ஷி சின்ஹாவும், வெளியேறுகிறார்.

    தேடி அழைத்து வரும் மக்கள்

    தேடி அழைத்து வரும் மக்கள்

    அதற்குப் பிறகு அந்த அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு பகுதி கதை.

    வில்லன் ரஜினி

    வில்லன் ரஜினி

    அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் வில்லன் ரஜினி. வைரங்களை அபேஸ் செய்வதில் இவர் கில்லாடி. ஒருமுறை அணை வழியாக வரும் ரஜினி அங்கேயே தலைமறைவாகி விடுகிறார். அப்போதுதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒளிந்திருந்து வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார்.

    ரஜினி - ரஜினி சந்திப்பு

    ரஜினி - ரஜினி சந்திப்பு

    பெரியவர் ரஜினியை சந்திக்கிறார். மனம் மாறுகிறார். பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து அணையை மீட்டு மக்களைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதையாம்.

    கண்டு கொள்ளாத ரஜினி

    கண்டு கொள்ளாத ரஜினி

    -இதுதான் லிங்காவின் கதை என பலரும் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். ரஜினி படங்களின் கதைகள் ரிலீசுக்கு முன் வெளியாகாமலிருந்தால்தான் அதிசயம். எனவே இதையெல்லாம் ரஜினியோ ரவிக்குமாரோ கண்டு கொள்ளவில்லை.

    ரஜினி பிறந்த நாளிலா? பொங்கலுக்கா?

    ரஜினி பிறந்த நாளிலா? பொங்கலுக்கா?

    படம் ரஜினி பிறந்த நாளன்று வெளியாகும் என்று சொல்கிறார்கள். அதற்காகவே ராப்பகலாக ரஜினி டப்பிங் பேசி வருகிறார். இன்னொரு தரப்பு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வாய்ப்புதான் என்கிறார்கள். ரஜினி - சோனாக்‌ஷி சின்ஹாவும் ஆடிப் பாடும் பொங்கல் பாடல் ஒன்று இடம் பெறுவதை வைத்து இந்த பொங்கல் ரிலீஸ் செய்தி பரவுகிறது.

    English summary
    Here is the story and release plans of Rajinikanth's latest flick Lingaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X