» 

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் படத்தில் சுஹாசினி

Posted by:
 

சென்னை: சுஹாசினி மணிரத்னம் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறார்.

நடிப்புக்கு பெயர் போன சுஹாசினிக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்தால் அவர் நடிப்பார். இந்நிலையில் தமிழில் அவருக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லையோ என்னவோ அவர் மலையாளம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய மலையாள படமான களிமண்ணுவில் ஸ்வேதா மேனனின் தோழியாக நடித்திருந்தார் சுஹாசினி.

இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்தில் அவர் நடிக்கிறார்.

ராமானுஜர்

கணிதமேதை ராமானுஜரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படத்தில் தான் சுஹாசினி நடிக்கிறார்.

சுஹாசினி அம்மா

ராமானுஜரின் அம்மாவாக சுஹாசினி நடிக்கிறார். ராமானுஜரின் முன்னேற்றத்தில் அவரது தாய்க்கு தான் முக்கிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சுஹாசினியின் கதாபாத்திரம் வெயிட்டானது.

முதலில் மாதவன்

படத்தை மோகமுள், பாரதி ஆகிய படங்களை எடுத்த ஞானராஜசேகரன் இயக்குகிறார். ராமானுஜராக நடிக்க மாதவனை கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

ஜெமினி பேரன்

மாதவன் மறுத்ததை அடுத்து ராமானுஜராக ஜெமினி கணேசனின் பேரன் அபினய் நடிக்கிறார்.

Read more about: suhasini, ramanujar, mother, ராமானுஜர், சுஹாசினி, அம்மா
English summary
Suhasini Maniratnam is acting in a tamil movie after a long time. She has agreed to act as Ramanujar's mother in the movie based on the life of the great mathematician from TN.

Tamil Photos

Go to : More Photos