»   »  150 அடி அம்மன் சிலை... 350 டான்சர்ஸ்... சாமி ஆடிய நடிகர்கள்... ‘ஆ’வென கத்திய திரிஷா

150 அடி அம்மன் சிலை... 350 டான்சர்ஸ்... சாமி ஆடிய நடிகர்கள்... ‘ஆ’வென கத்திய திரிஷா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரண்மனை படத்தின் முதல் பாகத்தை விட அதன் இரண்டாம் பாகம் சிறப்பாக வந்திருப்பதாக அப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார் .

சுந்தர்.சி. படத்தைப் பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம் என்ற நிலை மாறி தற்போது அடுத்தடுத்து பேய்ப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைப் பயத்தில் நடுங்க வைத்து வருகிறார் அவர்.


அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் தயாரான அரண்மனை 2 படம் நாளை ரிலீசாக இருக்கிறது.


அழகிய பேய்கள்...

முதல்பாகத்தில் பேயாக மிரட்டியிருந்த ஹன்சிகா இப்படத்திலும் நடித்துள்ளார். கூடவே மற்றொரு அழகிய பேயாக திரிஷா இதில் சேர்ந்துள்ளார். படத்தின் நாயகனாக சித்தார்த் நடித்துள்ளார்.


இரண்டாம் பாகம்...

இந்நிலையில், அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் சுந்தர்.சி.


கிளைமாக்ஸ்...

அதில், அரண்மனை படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஜன்னலில் பேய் நிற்பது போன்று ஒரு காட்சி வரும். அதைப் பார்த்து விட்டு, ரசிகர்கள் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதனைத் தொடர்ந்தே அது குறித்த வேலைகளில் தான் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஹன்சிகாவுக்கு முதல் போன்...

மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘அரண்மனை-2வுக்கான கதை ‘ரெடி'யானதும் முதல் ‘போன்' ஹன்சிகாவுக்குதான் அடிச்சேன். விஷயத்தை கேட்டுட்டு இந்த படத்திலும் கண்டிப்பா நான் இருப்பேன்னு நான் கேட்கறதுக்கு முன்னாடியே முந்திக்கிட்டு ‘கால்ஷீட்' கொடுத்தாங்க.


அரண்மனை 3...

முதல் பாகத்தை விட இரண்டாம் பகுதி ‘சூப்பரா' வந்திருக்கு. சொல்ல முடியாது அரண்மனை-3 கூட வர வாய்ப்பு இருக்கிறது. சித்தார்த் முழு ஈடுபாட்டோடு நடிச்சி கொடுத்திருக்கார்.


முதல் பேய்ப்படம்...

அதே மாதிரி திரிஷா. ரெண்டு பேருக்குமே இது முதல் பேய்ப்படம். செமையா நடிச்சிருக்காங்க.


கிளாமர் பேய்...

ஒரு காட்சியில் திரிஷா ஆன்னு கத்தனும். தொண்டை கட்டுற அளவுக்கு தொடர்ச்சியா இரண்டு மணி நேரம் கத்தி நடிச்சிருக்காங்க. செம கிளாமராவும் வர்றாங்க.


சவாலான பாடல்...

ஒரு அம்மன் பாட்டு இருக்கு. அந்தப் பாடலை ‘ஷூட்' பண்றது பெரிய சவாலாகவே இருந்தது.


சாமி ஆடிய பெண்கள்...

150 அடி உயர அம்மன் சிலை முன்னாடி 350 ‘டான்ஸர்', ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடிச்சாங்க. ஒவ்வொரு ‘ஷாட்' எடுக்கும்போதும் நாலு பேருக்காவது நிஜமாகவே சாமி வந்திடும்.


ஹைலைட்...

ரொம்ப பிரமிப்பான அனுபவமா இருந்தது. இந்தப் பாட்டு படத்தின் ‘ஹைலட்டா' இருக்கும்" என இவ்வாறு சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.


English summary
The flim director Sundar.C has opened his secret for taking horror movies continuously.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos