»   »  சன்னி லியோனோட தம்பி என்ன பண்றார் தெரியுமா?

சன்னி லியோனோட தம்பி என்ன பண்றார் தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோனைப் பற்றி அறிமுகமே தேவையில்லை. ஆனால் அவரோ தனது தம்பிக்கு பெரிய அறிமுகம் கொடுத்து வெளியுலகுக்குக் கொண்டு வந்துள்ளார்.

இத்தனைக்கும் சன்னியின் தம்பி ரொம்பப் பிரபலமான சமையல் கலைஞராம் அமெரிக்காவில்.

இந்த நிலையில் தனது தம்பி குறித்து டிவிட்டரில் விதம் விதமான படம் போட்டு இதுதான் என் பாசக்கார தம்பி என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார் சன்னி.

சமையல் கலைஞர்...

சன்னியின் தம்பி பெயர் சந்தீப் வோரா. கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். பிரபலமான சமையல் கலைஞராக அங்கு திகழ்கிறார்.

பாசமலர்கள்...

தம்பி மீது அக்காவும், அக்கா மீது தம்பியும் அதீத பாசம் கொண்டவர்களாம். எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ வெளியே கிளம்பிப் போய் விடுவார்களாம். குடும்பத்தோடு அடிக்கடி எங்காவது போய் விடுவது இந்த பாசமலர்களின் வழக்கம்.

அக்கா வீட்டுக்காரர்...

அக்கா வீட்டுக்காரர் டேணியல் வெப்பர் என்றால் சந்தீப்புக்கு ரொம்பப் பிரியமாம். அடிக்கடி மாம்ஸுடன் கலாய்ப்பதும், கேலி செய்வதுமாக இருப்பாராம்.

ஒரே ஆசை...

இப்போது சன்னியின் ஒரே ஆசை என்ன தெரியுமா.. தன்னைப் போலவே தனது தம்பிக்கும் இந்தியாவிலேயே சூப்பர் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதானாம். அப்போதுதானே தம்பியை அடிக்கடி பார்த்துக் கொள்ள முடியும் என்ற பேராசைதான் இதற்குக் காரணமாம்.

English summary
Sunny Leone aka Karenjit Kaur Vohra, might have garnered unadulterated publicity in just 32-years-of life, but her younger brother is a star in his own right. A chef at one of the most famous pubs in California, Sundeep has many signature dishes to his credit.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos