twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கப்பாவின் இரண்டரையாண்டு கடும் உழைப்பு இது! - மனம் நெகிழ்ந்த சூர்யா, கார்த்தி

    By Shankar
    |

    மகாபாரதத்தை இரண்டே கால் மணி நேரத்தில் சொற்பொழிவாக நடத்துவது சாதாரண விஷயமல்ல. இதற்காக இரண்டரை ஆண்டுகள் கடுமையாக உழைத்தார் என் அப்பா சிவகுமார், என் மனம் நெகிழ்ந்துள்ளார் கார்த்தி.

    நடிகர் சிவகுமார் ஈரோட்டில் உள்ள வேளாளர் மகளிர் கல்லூரியில் மகாபாரதத்தை 2 மணி 15 நிமிடங்களில் உறை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய உரையை கேட்க அவருடைய குடும்பத்தினரான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் அவர்களின் தாயார் , நடிகை ஜோதிகா , நடிகர் கார்த்தியின் மனைவி ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுடன் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

    Surya, Karthi and Jyothika hails Sivakumars hard effort

    அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்புரை நிகழ்த்திய நடிகரும், நடிகர் சிவகுமார்
    அவர்களின் மூத்த புதல்வரும்மான நடிகர் சூர்யா அவர்கள் தனது உரையில், "வெள்ளாளர் மகளிர் கல்லூரி குடும்பத்தினர், ஆசிரியர், பேராசிரியர், காவல் துறை, அப்பாவின் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக்
    கொண்டு, இந்த நாள் உங்களுக்கு எப்படியோ அப்படியே எங்களுக்கும் சிறந்த நாள், என்
    அப்பாவின் இரண்டரை வருட உழைப்பு இது, இதற்காக ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் ஒதுக்கி இருக்கிறார்.

    நாங்கள் ராமயணம் உரை நிகழ்த்தும் போது வருவதாக இருந்தோம் ஆனால் எங்களால் அதற்கு எந்த வித தடங்கல்கள் இருக்க கூடாது என்று ஒதுங்கி விட்டோம்.
    ஆனால் இந்த முறை நாங்களே விரும்பி வந்திருக்கிறோம்.

    கனவை நிகழ்த்த நேரமோ, காலமோ தேவையில்லை என்பதற்க்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. இன்று அப்பாவின் கனவு மெய்ப்படவிருக்கிறது. அதே போல் நாளை உங்கள் கனவும் வெற்றி பெறும் அதனால் அனைவரும் அமைதியுடன் உரையை
    கேட்போம்," என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார் நடிகர் சூர்யா.

    அவரை தொடர்ந்து உரையாற்றிய நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி, "ஈரோடு மிகவும் சிறந்த ஊர், எல்லாரும் என்னை எங்க ஊர் மாப்பிள்ளை, எங்க ஊர் மாப்பிள்ளைன்னு சொல்றாங்க. அதே போல இந்த கல்லூரியும் சிறப்பு வாய்ந்த ஒரு இடம் தான். ஏன் என்றால் இரண்டாவது முறையாக அப்பா அவர்கள் இந்த கல்லூரியில் உரை நிகழ்த்துகிறார். கல்லூரியில் உரை நிகழ்த்துவது சாதாரண செயல் அல்ல. அதற்க்காக அப்பா இரண்டு வருடம் உழைத்து இருக்கிறார். அனைத்து மகாபாரத புத்தகப் பிரதிகளை வாசித்து மற்றும் நண்பர்களுடம் கலந்து உரையாற்றி மற்றும் சோப்ரா அவர்களின் மகாபாரதத்தைப் பார்த்து தற்ப்போது உறை நிகழ்த்த வந்திருக்கிறார்.

    அதனால் கடைசி முறை ரமாயணம் பற்றிய உரையை நீங்கள் அனைவரும் அமைதியாக கவனித்தீர்களே அதே போல் இந்த முறையும் அமைதியாக இருக்க வேண்டும் இதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது அதனால் தான் நாங்களும் அதை கேட்க இங்கே வந்துள்ளோம்," என்று கூறி நன்றிகளுடன் தனது உரையை முடித்தார்.

    அதைத் தொடர்ந்து நடிகர் சிவகுமாரின் அவர்களின் மூத்த மருமகள் ஜோதிகா அவர்கள் பேசினார்.

    "நான் இந்த குடும்பத்தில் மருமகளாக வந்தது எனக்குப் பெருமைக்குரிய ஒன்று. எனது மகன் தேவ் இப்போது அப்பாவை (சிவகுமார்) போலவே அறிவாற்றலுடன் இருக்கிறான். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதலில் அப்பாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த உரையை அவர் சிறப்பாக நிகழ்த்துவதற்க்கு. நான் இங்கு எங்கள் குடும்பத்துடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது அதற்காக அப்பாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் ஜோதிகா.

    English summary
    Actor Karthi, Surya and Jyothika have hailed Sivakumar's hard effort for delivering Mahabharatham speech in 2.15 hours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X