»   »  இன்று 'வில்லாதி வில்லன்' சூர்யா 'ஸோலோவாக' களமிறங்கும் 24!

இன்று 'வில்லாதி வில்லன்' சூர்யா 'ஸோலோவாக' களமிறங்கும் 24!

Posted by:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சூர்யாவும் அவர் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விஞ்ஞான விறுவிறுப்பான '24' இன்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியானது.

Select City
Buy M.A Pass (24 March) (A) Tickets

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் 24. சமந்தா, நித்யா மேனன் என இரண்டு நாயகிகள். சரண்யாவுக்கு மிக அழுத்தமான வேடம்.


சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.


தமிழுக்குப் புதுசு

தமிழுக்குப் புதுசு

இந்தப் படம் தமிழ் சினிமாவுக்குப் புதிய களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டைம் மிஷின் பற்றி ஏற்கெனவே ஓரிரு படங்கள் வந்தாலும், அவை வழக்கமான தமிழ் சினிமா பாணியில் அமைந்திருக்கும். ஆனால் இந்தப் படம் ஹாலிவுட் பாணியில் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளதாக சூர்யா தெரிவித்திருந்தார்.


வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

இந்தப் படத்தில் சூர்யா முதல் முறையாக கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார். அவர் ஏற்றுள்ள மூன்று வேடங்களில் ஹைலைட் இந்த வில்லன் வேடம்தானாம்.


ரஹ்மான்

ரஹ்மான்

சூர்யாவுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் ஏஆர் ரஹ்மான், பாடல்கள் பின்னணி இசை குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.


உலகெங்கும்..

உலகெங்கும்..

சூர்யா படங்களில் அதிக பொருட்செலவில் உருவான படம் மட்டுமல்ல... அதிக அரங்கில் உருவாகியுள்ள படமும் இதுதான். தயாரிப்பாளர் சூர்யா படத்தின் தரத்துக்காக பணத்தை தாராளமாகவே செலவு செய்துள்ளதாக ஒளிப்பதிவாளர் திரு நேற்றுதான் பேட்டியளித்தது நினைவிருக்கும்.


சூர்யா

சூர்யா

தனது படம் பிரமாண்டமாய் வெளியாகி, வெளிநாடுகளில் ரசிக்கப்படுவதைப் பார்க்க சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். கலிபோர்னியாவில் அவர் 24 படத்தைப் பார்க்கிறார்.


English summary
Surya's much expected movie 24 is hitting the screens worldwide today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos