»   »  ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நான்கு நாயகிகளும்!

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நான்கு நாயகிகளும்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தில் வெள்ளிவிழாக் காணும் அளவுக்கு நிலைத்து நிற்பது சாமானிய விஷயமல்ல. அந்த வகையில் டி சிவா சாதித்துவிட்டார். ஆம்.. இது அவரது அம்மா கிரியேஷன்ஸுக்கு 25 வது ஆண்டு.

இந்த வெள்ளி விழா ஆண்டில் அவர் தயாரிக்கும் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

T Siva's Amma Creation celebrates Silver Jubilee

அந்தப் படம்தான் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும். இதில்கதாநாயகிகளாக ரெஜினா கசன்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, நான் கடவுள் ராஜேந்திரன் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மேலும் மயில்சாமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இசை : டி.இமான், பாடல்கள் : யுகபாரதி கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார் ஓடம்.இளவரசு.

இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், "காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம்.

பெண்களின் முதல் காதல் அவர்களின் வாழ்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தற்போதுநடைபெற்றுக் கொண்டிருக்கிறது," என்றார்.

இப்படத்தை அம்மா கிரியேஷன் டிசிவா உடன் 2 எம்பி நிறுவனம் சார்பாக ரகுநாதன், பிஎஸ் சந்திரசேகர் மற்றும் ஆர்சரவண குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். டிசம்பர் வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.

English summary
T Siva's Amma Creations celebrate its Silver Jubilee year with its project Gemini Ganesanum Surulirajanum.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos