»   »  ஜல்லிக்கட்டு அப்புறம், முதல்ல எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. திரையுலகம் மெகா பிளான்!

ஜல்லிக்கட்டு அப்புறம், முதல்ல எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. திரையுலகம் மெகா பிளான்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுடன் சேர்ந்து எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட விரும்புவதாக தமிழ் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து தமிழ் திரையுலகினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறுகையில்,

Tamil film industry's plan for MGR centenary celebration

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். அதன் துவக்கமாக வரும் 17ம் தேதி சென்னை அபிராமி தியேட்டரில் துவக்க விழா நடைபெறும். அன்று அந்த தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் படம் திரையிடப்படும்.

அனைத்து தியேட்டர்களிலும் காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். எம்.ஜி.ஆர். நடித்துள்ள 136 படங்கள் இந்த ஆண்டு முழுவதும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இயக்குனர் பாரதிராஜா கூறுகையில்,

அரசுடன் இணைந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம். அரசுடன் சேர்ந்து திரையுலகம் எம்.ஜி.ஆர். விழாவை நடத்தினால் அதிர்வு பெரிய அளவில் இருக்கும்.

இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி சேர்ந்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை நடத்துகின்றன என்றார்.

பாரதிராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும் என்று திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.

English summary
Tamil film industry has decided to celebrate MGR centenary in a grand manner in association with Tamil Nadu government.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos