»   »  தனு வெட்ஸ் மனு .. 4 வருடம் கழித்துத் திரும்பிப் பார்த்த மேடி, கங்கனா!

தனு வெட்ஸ் மனு .. 4 வருடம் கழித்துத் திரும்பிப் பார்த்த மேடி, கங்கனா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனு வெட்ஸ் மனு முதல் பாகத்தில் தனு (கங்கனா )வும், மனு (மாதவன்)வும் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர். இரண்டாம் பாகம் அவர்களது திருமண வாழ்க்கையை 4 வருடங்கள் கழித்து இருவரும் திரும்பிப் பார்ப்பதாக அமைந்திருக்கிறது.

படம் ஆரம்பிக்கும் போது இருவரும் மருத்துவர் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். இருவர் முகங்களிலும் இறுக்கம் நிறைந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ காரணமாக திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு மனதளவிலும் இருவரும் பாதிக்கப்படுகின்றனர்.

கவுன்சிலிங்கிற்காக இருவரும் லண்டன் சென்று திரும்பும் போது தனு தனது முன்னாள் காதலனை பார்க்க மனு டட்டூவை (தோற்றத்தில் கங்கனாவை போலிருக்கும்) சந்தித்து காதலில் விழ, முடிவை சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

கங்கனா குயின்

படத்தில் இரு வேறு விதமான நடிப்பிலும் வித்தியாசத்தைக் காட்டி நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருக்கிறார். தாம் தூம் படத்தில் லூசுப் பெண்ணாக நடித்த கங்கனாவா இது. படமானது மிக எளிதாக பல விருதுகளை இவருக்குப் பெற்றுத் தரப் போகிறது.

தோளில் சுமந்துள்ளார்

அநேகமாக் குயீன் படத்தின் விருதுகள் இந்தப் படத்தின் விருதுகளால் முறியடிக்கப் படலாம்,தனியாளாக படத்தைத் தூக்கி தன் தோள்களில் சுமந்திருக்கிறார்.

மாதவன் ரீ என்ட்ரி

மீண்டும் வெள்ளித் திரையில் மாதவன் எந்த விதமான அலட்டலும் இல்லாமல் மிக எதார்த்தமான நடிப்பால் மீண்டும் பார்முக்கு வந்திருக்கிறார் மேடி.

ஹாட்ரிக் வெற்றி ஆனந்துக்கு

படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்க்கு ஹாட்ரிக் வெற்றி கிட்டியுள்ளது இந்தப் படம் மூலம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் படாவிட்டால் என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் துணிந்து நின்று ஜெயித்திருக்கிறார்.

சரியான மிக்ஸிங்

ஹிமான் சூர் சர்மாவின் கதை வசனத்தில், ராஜசேகரின் பாடல்கள் மற்றும் தனிஷ்க் அண்ட் வயுவின் இசை இவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பாடல்கள், வசனம், இசை என அனைத்தையும் சரியான கலவையில் கொண்டு வந்து மிக்சிங் அண்ட் மேட்சிங்கில் ஜொலித்திருக்கிறார் ஆனந்த்.

கொஞ்சம் செண்டிமெண்ட் கொஞ்சம் எமோசனல்

குடும்பக் கதை அல்லவா. ஆங்காங்கே கொஞ்சம் செண்டிமெண்ட் ,கொஞ்சமே கொஞ்சம் எமோசனல் என படம் முழுவதும் தூவி விட்டிருக்கிறார்கள்.நோ பன்ச் டயலாக் நோ குத்துப் பாட்டு...இந்திய சினிமா வளர்கிறதே மம்மி!.

இன்னும் நீங்க டிக்கெட் புக் பண்ணலயா

தாராளமா குடும்பத்தோட உக்காந்து பாக்கலாம் பாஸ் இன்னும் டிக்கெட் புக் பண்ணலன்னா பர்ஸ்ட் போய் பண்ணுங்க..

தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன் ஆகியிருக்கிறார்கள்...!

 

English summary
Tanu Weds Manu Returns is a must watch movie, it surpasses the entertainment value of the original even. Go book your tickets asap.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos