twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கால்ஷீட் டைட்.. ரஜினியின் லிங்கா படத்திற்கு நோ சொன்ன தம்பி ராமையா

    By Mayura Akilan
    |

    நடிகர் தம்பி ராமையா இப்போது அனைத்துத் தரப்பு இயக்குநர்களாலும் தேடப்படும் நடிகராக மாறியிருக்கிறார். இப்போது நிறைய படங்களில் நடித்து வருவதால் அவரால் ரஜினி படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

    மைனாவில் நடிகராக அறிமுகமாகி இப்போதுவரையிலும் பல வெற்றிப் படங்களிலும் நடித்திருக்கும் தம்பி ராமையாவின் இனிமையான பழகும் தன்மை அனைவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது.

    தம்பி ராமையா தற்போது சித்தார்த் நடித்துள்ள காவியத்தலைவன் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் கொம்பன் படத்திலும், சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் தம்பி ராமையா நடித்து வருகிறார்.

    மிஸ் ஆன ரஜினி படம்

    மிஸ் ஆன ரஜினி படம்

    இந்த பிஸியில் இந்த வருடம் ஒரு முக்கியமான படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம்.

    கால்ஷீட் இல்லையே

    கால்ஷீட் இல்லையே

    இந்தப் படத்தில் நடிப்பதற்காக கே.எஸ்.ரவிக்குமார் தம்பி ராமையாவை கேட்டும் அவரால் நடிக்க முடியவி்ல்லையாம்.. காரணம் அவ்வளவு டைட் கால்ஷீட்.

    32 நாட்கள் வேணுமே

    32 நாட்கள் வேணுமே

    லிங்கா படத்திற்காக தொடர்ச்சியாக 32 நாட்கள் கேட்ட தேதிகளில் காவியத்தலைவன் படத்தில் நடிக்க ஏற்கெனவே ஒத்துக் கொண்டுவிட்டதால் அதில் நடிக்க முடியவில்லை என்கிறார் தம்பி ராமையா.

    ரொம்ப பிஸி

    ரொம்ப பிஸி

    எத்தனையோ நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரது படத்திலேயே நடிக்க முடியாத அளவுக்கு தம் ராமையா பிஸியாக இருக்கிறார்.

    English summary
    Thambi Ramaiah is a busy character actor in Tamil. He recently got a chance to act with Superstar Rajinikanth in Lingaa. They asked him for 32 days of call sheet from him. Unfortunately, he is busy with too many movie commitments. So he couldn't accept the movie and thus missed a chance to work with Superstar Rajinikanth in Lingaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X