»   »  400 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்.. "சிங்கிளாக" வருகிறது தனுஷின் தங்கமகன்!

400 க்கும் மேற்பட்ட தியேட்டர்கள்.. "சிங்கிளாக" வருகிறது தனுஷின் தங்கமகன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் - சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கமகன் திரைப்படம் நாளை தமிழ்நாடு முழுவதும் 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

தனுஷ், எமி ஜாக்சன், சமந்தா, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். இப்படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரித்து இருக்கிறார்.


இந்நிலையில் நாளை அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது தனுஷின் தங்கமகன் திரைப்படம்


தங்கமகன்

தனுஷ், எமி ஜாக்சன், சமந்தா, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். இப்படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரித்து இருக்கிறார்.வேல்ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். நாளை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது.


டிரெய்லர்

கடந்த வாரம் வெளியான இப்படத்தின் டிரெய்லரை இதுவரை சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான பேர் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பார்த்து ரசித்திருக்கின்றனர்.


தனியே தன்னந்தனியே

தமிழில் தங்கமகன் தவிர்த்து வேறு படங்கள் எதுவும் நாளை வெளியாகவில்லை. இதனால் தனியே தன்னந்தனியே நாளை தமிழ்நாடு திரையரங்குகளை ஆக்கிரமித்து இருக்கிறது தங்கமகன்.


தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்

தமிழ்நாட்டில் சுமார் 400 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் இப்படம் ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.


படக்குழுவினர் மகிழ்ச்சி

தங்கமகன் போட்டியின்றி வெளியாவது,அதிகமான திரையரங்குகளில் வெளியாவது மற்றும் படத்திற்கான முன்பதிவு நன்றாக இருப்பது போன்ற காரணங்களால் தற்போது தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


தனுஷ் - சமந்தா

இப்படத்தில் தனுஷின் காதலியாக எமி ஜாக்சனும், மனைவியாக சமந்தாவும் நடித்திருக்கின்றனர். தங்கமகனில் தனுஷுடன் இணைந்து நடித்த சமந்தா அடுத்தடுத்து 2 படங்களில் அவருடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.


சமந்தாவிற்கு கை கொடுக்குமா?

விக்ரமுடன், சமந்தா இணைந்து நடித்த 10 என்றதுக்குள்ள திரைப்படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய நிலையில் தங்கமகனைப் பெரிதும் நம்பியிருக்கிறார் சமந்தா. சமந்தாவின் நம்பிக்கையைத் தங்கமகன் காப்பாற்றுமா? பார்க்கலாம்.


English summary
Dhanush's Thangamagan Movie Tomorrow Release for More than 400 Screens in Tamilnadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos