twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் சமஸ்கிருத அனிமேஷன் படமாக உருவாகும் புண்ணியகோடி.. இளையராஜா இசையில்!

    By Soundharya
    |

    சென்னை: பல மொழிகளில் படங்கள் வந்தாலும் சமஸ்கிருத மொழியில் திரைப்படம் என்பது அபூர்வம். ஆனால், தற்போது சம்ஸ்கிருத மொழியிலும் ஒரு படம் வெளி வர உள்ளது. அதுவும் அனிமேஷன் படம்.

    புண்ணியகோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இது இந்தியாவின் முதல் சமஸ்கிருத அனிமேஷன் திரைப்படம். இது crowd funded ( குழு முதலீடு ) மற்றும் crowd sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி. இப்படம் உண்மயை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இது மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுதுபோக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு. இப்படத்தின் மூல கதை மஹாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.

    The First Animation Movie in Sanskrit

    கருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசு மாடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் புண்ணியகோடி என்னும் அந்தப் பசு மாட்டை ஒரு புலி பிடித்து விடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம் - நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும், என் கன்றுக்கு பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணியகோடி தன் கன்றின் பசியாற்றிய பின்பு மீண்டும் புலியிடம் செல்கிறது. தப்பித்துச் செல்ல வாய்ப்பிருந்தும் திரும்ப வந்த புண்ணியகோடியின் நேர்மையைக் கண்டு அந்தப் புலி புண்ணியகோடியை கொல்லாமல் விட்டுச் செல்கிறது.

    இப்படத்தில் புகழ் பெற்ற பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, நடிகை மற்றும் இயக்குநர் ரேவதி இப்படத்தில் முக்கிய பாத்திரமான புண்ணியகோடிக்கு டப்பிங் பேசுகிறார். இது தவிர யு-டர்ன் படத்தில் நடித்த ரோஜர் நாராயணன் மற்றும் கன்னட மேதை நரசிம்மமுர்த்தி ஆகியோரும் டப்பிங் பேசுகிறார்கள்.

    வி. ரவி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் மல்டி மீடியா மற்றும் அனிமேஷன் துறையில் சிறுவர்களுக்கான படங்களை உருவாக்குவதில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இவர் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இப்படத்தின் இயக்குநர் ரவி தன்னுடைய முயற்சியால் பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற பற்பல தொழில்நுட்ப கலைஞர்கலைகளை இப்படத்தில் பணியாற்ற ஒருங்கிணைத்துள்ளார்.

    படம் பற்றி ரவி சங்கர் கூறுகையில்,

    தி லெஜென்ட் ஆப் புண்ணியகோடி திரைப்படம் உண்மை மற்றும் தூய்மை பற்றி பேசும் ஒரு படைப்பாகும். இப்படத்தில் உள்ள கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். சமஸ்கிருதம் 5000 வருடம் பழமையான மொழியாகும். அதை அழியாமல் பாதுகாக்கும் பணி நம்முடையது. இப்படத்தின் வெற்றி மேலும் இதை போன்ற படங்களை உருவாக்க ஒரு ஊன்றுதலாக அமையும் என்றார்.

    இந்த முயற்சிக்கு உதவ துபாயில் வாழும் ஓவியர் திருமதி ஷெரின் ஆப்ரஹாம் ஒரு கலை கண்காட்சியை நடத்த முடிவெடுத்துள்ளார். இதில் இவர் வரைந்த இருபதிற்கும் மேற்பட்ட ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த ஓவியங்களின் விற்பனையால் வரும் தொகையை புண்ணியகோடியின் தயாரிப்புக்கு கொடுக்கப்போவதாக ஷெரின் அறிவித்துள்ளார். இந்த கண்காட்சி சென்னை ஆள்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுஸ் அரங்கில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒரு படம் தயாரிக்க ஓவியர்கள் ஒருங்கிணைவது இது முதன்முறையாகும்.

    நம் திரையுலகில் பல்வேறு தொழிநுட்ப வளர்ச்சிகளும் மாற்றங்களும் பெருகிவரும் நிலையில், ஒரு புதிய மொழி இணைந்துள்ளது என்பது பெருமைக்குரிய வளர்ச்சியே ஆகும். அதுவும் முதல் படமே குழந்தைகள் முதல் அனைவரும் பார்க்கும் படி அமைந்தது மேலும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

    English summary
    The First Animation movie in Sanskrit language is named Punniyakodi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X