பாதியில் கிளம்பினாலும், பேஸ்புக்கில் ஐ விழாவைப் பாராட்டிய அர்னால்ட்!
சென்னை: ஐ பட இசை வெளியீட்டு விழாவில் பாடிபில்டர்களில் ஒருவர் ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் கையை பிடித்து முத்தம் கொடுத்ததால் தான் அவர் கோபத்தில் விழாவில் இருந்து பாதியில் கிளம்விட்டார் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், விழா பற்றி நெகடிவாக எதையும் சொல்லவில்லை அர்னால்ட். மிகவும் வண்ணமயமான விழா என்றே பேஸ்புக்கில் வர்ணித்துள்ளார். காரணம், வந்திருந்த ரசிகர்கள் தந்த உற்சாகமான வரவேற்பு.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நெக்கர் கலந்து கொண்டார். அவரை இந்த விழாவில் கலந்து கொள்ள வைக்க பெரும் தொகையை செலவு செய்தனர்.
அப்படி இருந்தும் அர்னால்ட் இசையை வெளியிடாமல் பாதியிலேயே கிளம்பிச் சென்றார்.

தாமதம்
இசை வெளியீட்டு விழா பல மணிநேரம் தாமதாக துவங்கியதால் தான் அர்னால்ட் கடுப்பாகி பாதியிலேயே கிளம்பிவிட்டார் என்று முதலில் கூறப்பட்டது.

ஏ.சி.
விழாவுக்கு வந்த ரசிகர்கள் கூட்டம், விசில் சத்தம் ஆகியவற்றால் அர்னால்ட் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் விழா நடந்த இடத்தில் ஏ.சி.யை சரியாக வைக்காததால் அர்னால்டுக்கு வெக்கையாக இருந்ததாம்.

பாடிபில்டர்கள்
வெக்கையை பொறுத்துக் கொண்டு பாடிபில்டர்களின் நிகழ்ச்சியை அர்னால்ட் ரசித்து பார்த்துள்ளார்.

முத்தம்
பாடிபில்டர்களில் ஒருவர் திடீர் என்று அர்னால்டின் கையை பிடித்து முத்தம் கொடுத்தது அவரை எரிச்சல் அடைய வைத்துவிட்டதாம். அதனால் தான் பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு இசையை கூட வெளியிடாமல் விருட்டென்று சென்றுவிட்டார் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பில் கூறப்பட்டது.

பாராட்டு
இருந்தாலும், இதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல், தனது ஃபேஸ்புக்கில் "What a fantastic event in Chennai for the audio release of "I." To the incredible fans in India - thank you, thank you, thank you," என்று குறிப்பிட்டுள்ளார். விழா பற்றி ஆயிரம் குறைகள் இருந்தாலும், ரசிகர்கள் தன்னை வரவேற்ற, உற்சாகப்படுத்திய விதம் பிடித்துப் போனதால், விழாவைப் பற்றி நல்ல விதமாகவே எழுதியுள்ளார் அர்னால்ட்.


Click it and Unblock the Notifications











