twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உரு பட உண்மை கதை... அறிமுக இயக்குநர் தந்த டார்ச்சர்.. கதறும் தயாரிப்பாளர்!

    By Shankar
    |

    தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் இவற்றில் நஷ்ட கணக்கு தொடர்ந்தாலும் அது தெரியாமலே கதை சொல்லும் இயக்குநர்களின் மீது நம்பிக்கை கொண்டு புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    கோவை அவினாசியில் கோடிகளைக் குவிக்கும் கட்டுமான தொழில் அதிபர் விஜிக்கு சினிமா மீது பெரும் காதல். அதிலும் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்பதில் அளவற்ற மோகமும் ஆசையும் கொண்டிருந்த விஜியிடம், உதவி இயக்குநர் விக்கி ஆனந்த் கூறிய கதைதான் "உரு"வாக உலகமெங்கும் ரீலீஸ் ஆகியுள்ளது.

    The real story behind Uru movie

    இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, புரமோஷன் நிகழ்வுகளில் படத்தின் இயக்குநர் ஆப்சென்ட். என்னவென்று விசாரித்தால் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.

    தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்த கோடிகளை கொட்டி "உரு" படத்தைத் தயாரிக்க முன் வந்த விஜியை அறிமுக இயக்குநர் விக்கி ஆனந்த் தலைமையில் கோடம்பாக்கத்து சினிமா தொழில் நுட்ப கலைஞர்கள் உலுக்கி எடுத்த கதையை கூறினார் தயாரிப்பாளர்.

    ரூ1.67 கோடி பட்ஜெட், 25 நாட்கள் படப்பிடிப்பு 60 நாட்களில் முதல் பிரதி தயாராகி விடும், என்று இயக்குநர் கூறியதை நம்ம்பி படம் எடுக்க தயாரானார், சினிமா தயாரிப்பு, வியாபார அனுபவம் இல்லாத விஜி. படப்பிடிப்பு தொடங்கும் வரை பம்மி இருந்த விக்கி ஆனந்த்தும், அவரது குழுவும் அதன்பின் வழக்கம் போல இன்னொரு முகத்தைக் காட்டி காப்பி தயாராகும் வரை மும்மடங்கு பட்ஜெட்டை எகிற செய்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். இன்றுவரை தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையாம்.

    The real story behind Uru movie

    கலையரசன், தன்ஷிகா, மைம் கோபி இவர்கள் மட்டுமே முகம் தெரிந்த நடிகர்கள். 25 நாட்களில் 35 கால்ஷீட்டில் படத்தை எடுத்து முடித்து விடுவேன் என கூறிய இயக்குநர் 67 கால்ஷீட்டில் படத்தை முடித்து கொடுத்துள்ளார். படத்தில் மொத்த கதாபத்திரமே 10க்கும் குறைவு. ஆனால் படப்பிடிப்புக்கு இவர் பயன்படுத்திய தொழிலாளர்கள் எண்ணிக்கை 130.

    67 கால்ஷீட்டில் 21 கால்ஷீட்டை டபுள் பேட்டா கொடுக்கிற சூழலை இயக்குநரும், தயாரிப்பு நிர்வாகியும் உருவாக்கி பட்ஜெட்டை ரூ 3.13 கோடியாக எகிற வைத்துள்ளனர். என்ன ஆனாலும் படத்தை முடித்து விடுவது என்ற நிலையில் பண மதிப்பு நீக்க அறிவிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில் படத்தை எடுத்து முடித்து சென்னை வந்த தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படத்தின் போஸ்டு புரொடக்க்ஷன் வேலைகள் தொடங்க இயக்குநர் வரவில்லையாம்.

    The real story behind Uru movie

    'ஐல்லிக்கட்டு போராட்டத்தில் இருக்கிறேன்... அது முடிவுக்கு வந்த பின் தான் பட வேலைகளை தொடங்குவேன்' என இயக்குநர் கூறியுள்ளார். பெரும் முதலீட்டைப் போட்ட தயாரிப்பாளர் ஆத்திரமடையாமல் பொறுமை காத்தார். இயக்குநர் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகளை தொடங்கிய போது, பேட்ச் ஒர்க் வராது என கூறியிருந்த இயக்குநர், 5 நாட்கள் மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இது போன்ற வேலைகளுக்கு 10 பேர் போனால் போதும் என்ற நிலையில் 65 பேர் கொண்ட யூனிட்டை கொடைக்கானல் அழைத்துச் சென்று பேட்ச் ஒர்க் வேலைகளை செய்து திரும்பினார். டிசம்பரில் கிளைமேக்ஸ்சை சென்னையில் எடுத்து முடித்தார். ஆனால் படத்தை ஏப்ரல் இறுதி வரை முடித்துக் கொடுக்கவில்லை.

    நீண்ட போராட்டத்துக்குப் பின் மே மாதம் ரீலீஸ் என்று விளம்பரம் கொடுத்த பின் படத்தை முடித்து கொடுத்து விட்டுப் போன இயக்குனர் படத்தை ரீலீஸ் செய்ய, புரமோஷன் பணிகளுக்கு அழைத்த போது வரவில்லையாம்.

    "தனி மனிதனாக போராடி தமிழகமெங்கும் நேரடி வெளியிடாக உரு படத்தை வெளியிட்டுள்ளேன்.. இது எனக்கு பெரும் துயரமான அனுபவம் சார்," என கண் கலங்குகிறார் தயாரிப்பாளர் விஜி.

    இப்போது தயாரிப்பாளர் விஜி எழுப்பியுள்ள கேள்விகள் புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் புதிய தயாரிப்பாளர் பாளர்ளுக்கு ஒரு பாடம்.

    "வாய்ப்புக் கேட்டு வரும் போது பதுங்கி வரும் இயக்குநர்கள், படப்பிடிப்பு தொடங்கியவுடன் தயாரிப்பாளரை வேலைக்காரனாக மாற்றி விடுகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் படம் முடித்து விடலாம் என நம்ப வைத்து செலவை அதிகப்படுத்தி விடுகின்றனர். இயக்குநர் என்கிற முகவரி கிடைத்தவுடன் அதற்கு காரணமாகவர்களை அம்போ என விட்டு அடுத்த பட வாய்ப்புகளை தேடி போய் விடுகின்றனர். இவைகளை கவனத்தில் கொண்டு புதியவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்," என்கிறார் விஜி.

    அடுத்து என்ன திட்டம் என விஜியிடம் வினவியபோது, "என்னை நம்ப வைத்து பட்ஜெட்டை எகிற வைத்த இயக்குநர் விக்கி ஆனந்த் மீது நடவடிக்கை கோரி புகார் கொடுக்க உள்ளேன். என்னை எந்தந்த விஷயங்களில் யார் யார்ஏமாற்றி னார்கள் என்பதை ஆதாரங்களுடன் சம்பந்தபட்ட யூனியனில் புகார் கொடுக்கத் திட்டமிட்டுட்டுளேன். என்னை போன்று இனி வருபவர்கள் ஏமாறக் கூடாது என்ற நல்லெண்ணமே இதற்கு காரணம்," என்கிறார் விஜி.

    இயக்குநர் விஜி தரப்பிடமிருந்து இதுவரை நமக்கு எந்த பதிலும் இல்லை.

    Read more about: uru tamil cinema உரு
    English summary
    Here is the real story behind Uru movie that released on last Friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X