twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பாத்தீங்களா.. நான் சொன்னது உண்மைதான்னு நிரூபிக்கிறீங்க!' - எதிர்ப்பாளர்களுக்கு ஆமிர்கான் நச் பதில்!

    By Shankar
    |

    இந்தியாவில் மதச் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக தான் சொன்னதை எதிர்ப்பாளர்கள் நிரூபித்துவிட்டனர் என்று நடிகர் ஆமிர்கான் கூறியுள்ளார்.

    டெல்லியில் நேற்று நடந்த ராம்நாத் கோயங்கா நினைவு விருது வழங்கும் விழாவில் பேசிய ஆமிர்கான், "என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களைச் சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்துப் பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது," என்று கூறினார்.

    They proved my point, says Aamir

    இதற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் தொடர்கின்றன.

    ஆமிர்கானுடன் பணியாற்றிய பல முக்கிய கலைஞர்கள் கூட அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    இணையத்தில் பலரும் ஆமிர்கானை கடுமையாகச் சாடி வருகின்றனர். அவர் உடனே நாட்டை விட்டுப் போக வேண்டும் என்றெல்லாம் எழுதியும், மீம்ஸ்கள் போட்டும் வருகின்றனர்.

    இவற்றையெல்லாம் பார்த்து ஆமிர்கான் இன்று இப்படிக் கூறியுள்ளார்:

    "மதச் சகிப்பின்மை குறித்து நான் சொன்ன அத்தனை வார்த்தைகளுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். ஆனால் இப்போது என்னை எதிர்த்து சத்தம் போடும் அத்தனை பேரும், நான் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபித்துவிட்டனர்".

    English summary
    Aamir Khan said, "I stand by everything that I have said in my interview. To all the people shouting obscenities at me for speaking my heart out, it saddens me to say you are only proving my point."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X