twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமீர் இப்படியா பேசுவது... இயக்குநர் பெருமாள் பிள்ளை வருத்தம்!

    |

    சென்னை: இயக்குநர் அமீர், திலகர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய பேச்சு தங்களைப் புண்படுத்தி விட்டதாக அப்படத்தின் இயக்குநர் பெருமாள் பிள்ளை வருத்தம் தெரிவித்துள்ளர்.

    திலகர் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2ம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது.

    அதில் கலைப்புலி தாணு, சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதில் அமீரின் பேச்சு குறித்து இயக்குநர் பெருமாள் பிள்ளை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அமீர் பேசுகையில் ஐடியில் வேலை பார்ப்பவர்களை கழுத்தில் நாய் செயின் கட்டிக் கொண்டி திரிபவர்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அந்தப் பேச்சு குறித்து தனது அறிக்கையில் இயக்குநர் பெருமாள் பிள்ளை விளக்கம் அளித்துள்ளார்.

    நெஞ்சார்ந்த நன்றி...

    நெஞ்சார்ந்த நன்றி...

    திரை உலகின் பெருமதிப்புக்குரிய தாணு, இயக்குநர் சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், அமீர் மற்றும் பலர் கலந்து விழாவைச் சிறப்பித்தமைக்கு ‘திலகர்' திரைப்படக் குழுவினர் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிர்ச்சி...

    அதிர்ச்சி...

    அன்று இயக்குநர் அமீர் பேசுகையில், இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது அதிர்ந்துவிட்டேன். 'திலகர்' என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. 'திலகர்' என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.

    காந்தியின் மகன்கள்...

    காந்தியின் மகன்கள்...

    எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார். அவர் கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.

    பெயரைக் காக்க வேண்டும்...

    பெயரைக் காக்க வேண்டும்...

    தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக் காப்பற்ற வேண்டும்.

    ஐடி தலைமுறை...

    ஐடி தலைமுறை...

    தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டை மாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது:

    வேண்டுகோள்...

    வேண்டுகோள்...

    எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டு கோளாகவே வைக்கிறேன் என்று அமீர் அவர்கள் அன்று பேசியிருந்தார்.

    இயக்குநர் முத்துராமன் வழி...

    இயக்குநர் முத்துராமன் வழி...

    விழாவுக்கு வாழ்த்த வருபவர்கள் இயக்குனர் முத்துராமன் அவர்களைப் பின்பற்றினாலே போதும். அவர் ஒரு விழாவுக்கு வருவதற்கு முன் அவ்விழா யார் சம்பந்தப்பட்டது, யார் யார் அதில் நடித்திருக்கிறார்கள்? கதை எதைப் பற்றியது என்றெல்லாம் இயக்குனரிடம் தொலைபேசி மூலமாக கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டு வருவார்.

    நானே விளக்கியிருப்பேன்...

    நானே விளக்கியிருப்பேன்...

    அமீர் அவர்களுக்கு அந்த பழக்கம் கிடையாது போலும். பரவாயில்லை போகட்டும். ஆனால் மேடையில் கடைசியில் பேசியது அவர்தான். நடுவில் எவ்வளவோ நேரம் இருந்தது. அங்கிருந்த என்னை அருகினில் அழைத்து கதை எதைப் பற்றியது? ஏன் திலகர் என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டிருந்தால் நான் விளக்கம் அளித்திருப்பேன்.

    புண் படுத்திய பேச்சு...

    புண் படுத்திய பேச்சு...

    திலகர் படத்தின் கதையையோ அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தையோ தெரிந்து கொள்ளாமல் ‘திலகர்' கையில் அரிவாளை கொடுத்து இருப்பது மாபெரும் தவறு என்ற ரீதியில் உபதேசம் செய்ததோடு எனது கதாநாயகன் அரிவாள் வைத்திருப்பதால் அவர் குடிகாரன், கட்டப்பஞ்சாயத்து செய்பவன் , சாராயம் காய்ச்சும் நபர் என எல்லோருடனும் ஒப்பிட்டு பேசிவிட்டுப் போனது என்னையும், என் சார்ந்த பலரையும் வெகுவாகப் புண்படுத்தியது. காரணம் நாங்கள் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை எடுத்து படம் பண்ணியிருக்கிறோம் என்பதால்.

    மாபெரும் நோக்கம்...

    மாபெரும் நோக்கம்...

    இந்தப் படத்தின் தலைப்பு திலகர். கதாநாயகனின் பெயர். இது ​​முக்குலத்தோர் சமூகத்தின் வாழ்வியல் சார்ந்த கதை. இளங் குற்றவாளிகள் இனி இந்த சமூகத்தில் இருக்கக்கூடாது என்ற மாபெரும் நோக்கத்தைக் கொண்டது எனது படம். இதற்காகவே எனது தயாரிப்பாளர்கள் இக்கதையை தயாரிக்க முன்வந்தனர்.

    வாய்ப்பூட்டுச் சட்டம்...

    வாய்ப்பூட்டுச் சட்டம்...

    ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பொது இடங்களில் பேசக் கூடாது என்ற வாய்ப்பூட்டுச் சட்டம் இந்தியாவில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டுமே போட்டார்கள். ஒன்று வட இந்தியாவில் பாலகங்காதர திலகர், இரண்டு தென்னிந்தியாவில் பசும்பொன் உ.முத்துராமலிங்கம் அவர்கள்.

    உயிர் கொடுத்தவர்கள்...

    உயிர் கொடுத்தவர்கள்...

    ஆம். இந்த இருவரின் பேச்சும் ஆங்கில அரசுக்கு அச்சம் கொடுத்தது. . அவர்கள் மிதவாதிகளல்ல. இந்த சமூகத்துக்கு அடிமைத்தளையை உடைத்தெடுக்கும்​வகையில் வீரத்தையும் மானத்தையும் ​உயிர் கொடுத்து ஊட்டியவர்கள்.

    வீரப்பெயர்...

    வீரப்பெயர்...

    திலகர், சுபாஷ் சந்திரபோஸ் எனப் பெயர் வைத்துவிட்டு அவர்கள் கையில் ரோஜாவைக் கொடுக்க முடியாது. நேரு கையிலோ, காந்தி கையிலோ அதைக் கொடுக்கலாம். ஆகையால் அந்த வீரமும் விவேகமும் மிக்க தலைவரின் பெயர்​முக்குலத்தோர் சமூகத்தில் பலர் தம் குழந்தைகளுக்கு சூட்டுவது இன்றும் உள்ள பழக்கம்.

    பெயர்க்காரணம்...

    பெயர்க்காரணம்...

    திலகர் மாபெரும் தலைவர் என்பதும், விடுதலைப் போராட்ட வீரர் என்பதும், கேசரி என்ற பத்திரிக்கை ஆசிரியர் என்பதும், தம் பேச்சாலும் எழுத்தாலும் செயல் முறையினாலும் மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டியவர் என்பதையும் அறிந்தவனாதலால் அந்த மாபெரும் தீரமிக்க தலைவரின் பெயரை என் கதை நாயகனுக்கு சூட்டினேன். என் நாயகனின் கையில் அரிவாளைக் கொடுத்தேன். அவன் ஊதாரி அல்ல. குடுத்துவிட்டு கூலிக்கு கொலை செய்பவனுமல்ல.

    இயக்குநருக்கு அழகல்ல...

    இயக்குநருக்கு அழகல்ல...

    அன்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற மேலான பண்புகளை வலியுறுத்தும் கருத்துகளையும் காட்சிகளையும் கொண்டதே ‘திலகர்' திரைப்படத்தின் கதை. எதையும் தெரிந்து கொண்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டுமே தவிர அவசரக்கோலத்தில் வார்த்தைகளை அள்ளி வீசுவது அமீர் போன்ற பெரிய இயக்குநருக்கு அழகல்ல.

    அவசர கோலத்தில் பேச்சு...

    அவசர கோலத்தில் பேச்சு...

    மற்றவர்களின் படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசுவதை விட தாம் எடுக்கும் படங்கள் மூலம் வழிகாட்டினாலே போதுமே. "ராம்" படத்தில் ஸ்ரீராமரின் அவதாரம் பற்றியும், "ஆதிபகவன்" படத்தில் திருக்குறள் சிந்தனைகள் பற்றியுமா அமீர் அவர்கள் படமாக்கியிருந்தார்?? இதைப்பற்றியெல்லாம் அவரே யோசித்துப் பார்க்காமல் அவசரக்கோலத்தில் பேசிய ஒரு பேச்சு என்றே இதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. .

    எப்படி இது சேத்தி...

    எப்படி இது சேத்தி...

    தனக்கொரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்பது எந்த வகையில் சேர்த்தி என்பதை அமீர் அவர்கள் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் பெருமாள் பிள்ளை.

    English summary
    The Thilagar movie director Perumal Pillai accused director Ameer that his speech in the audio release function hurts all
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X