twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அருவி மலையில் ஏறி தமன்னாவை பிரபாஸ் பிடிப்பது இப்படித்தானாம்: வெளியான பாகுபலி ரகசியம்

    By Mayura Akilan
    |

    பாகுபலி படத்தில் பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கனவுப்பெண் தமன்னாவைப் பிடிக்க அருவி மலைமீது ஏறி பிரபாஸ் செல்வாரே எப்படி இப்படி எல்லாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்படித்தான் எல்லாமே என்று கிராபிக்ஸ் ரகசியங்களை வெளியிட்டுள்ளனர்.

    பிரம்மாண்டமான மகிழ்மதி அரண்மனை... பரந்து ஓடும் காட்டாறு... ஆற்றின் நடுவே குழந்தையை கையில் தூக்கிச் செல்லும் ரம்யா கிருஷ்ணன் என பிரம்மாண்டத்தில் மிரட்டியிருப்பார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு பலமுறை திரும்ப திரும்ப இந்த திரைப்படத்தைப் பார்க்கின்றனர் மக்கள். இணையதளங்களிலும் இந்தப் படத்தைப் பற்றி பலவித கருத்துக்கள் பகிரப்படுகின்றன. பிரம்மாண்ட அரண்மனையும், போர்களக்காட்சியும்,படம் பார்த்து வெளியே வந்த பின்னரும் கண்ணை விட்டு அகலாத காட்சிகள். எல்லாமே கிராபிக்ஸ் என்பது தெரிந்தும் திரும்ப திரும்ப படத்தைப் பார்க்க காரணம் படமாக்கப்பட்ட விதம்தான்.

    பல ஹாலிவுட் படங்கள்.. பாலிவுட் படங்கள் எல்லாம் படம் வெளியானதும். வி. எஃப் .எக்ஸ் உருவான விதத்தை வீடியோவாக வெளியிடுவது வழக்கம். அதே வழக்கத்தை இப்போது பாகுபலி படத்திலும் பின்பற்றியுள்ளனர்.

    பாகுபலி கிராபிக்ஸ்

    பாகுபலி கிராபிக்ஸ்

    முக்தா வி.எஃப் எக்ஸ் பிரேக்டவுன்ஸ் என்ற நிறுவனம்தான் பாகுபலி படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் பாகுபலி உருவான விதத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.

    வீரனே பாடல்…

    வீரனே பாடல்…

    தமன்னா அறிமுகக் காட்சியில் பட்டாம்பூச்சிகள் சூழ தேவதையாய் தோன்றுவாரே... அதுவும்... அருவியில் ஏறி... மலைமீது தாவியும்... நீரில் அசால்டாக நடந்தும் செல்வாரே பிரபாஸ் இதெல்லாம் இப்படித்தான் என்று விளக்கியுள்ளனர் கிராபிக்ஸ் கலைஞர்கள்.

    வாட்டர் பாட்டில் குழந்தை

    வாட்டர் பாட்டில் குழந்தை

    ரம்யா கிருஷ்ணன் காட்டாற்றின் நடுவே ஒரு குழந்தையை எடுத்துச் செல்வாரே. குழந்தையாக ஒரு மினரல் வாட்டர் பாட்டிலைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதுதான் ஆச்சரியமான உண்மை..

    அறையில் உருவான அரண்மனை

    அறையில் உருவான அரண்மனை

    மகிழ்மதி நகரம், அரண்மனை,சண்டை காட்சியில் வரும் மிருகங்கள், இவை அனைத்தும் ஏதோ ஒரு அறையில், ஆர்டிஸ்ட்கள் கம்ப்யூட்டரில் வரைந்தவையே என்பதை காண்பித்துள்ளனர்.

    அசத்தல் கலைஞர்கள்

    க்ரீன் மேட் பின்னணியில் படமாக்கப்பட்ட காட்சிகளை வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் ரசிகர்களை அசத்தியிருக்கின்றனர் கம்யூட்டர் கலைஞர்கள். அந்த வித்தையை நீங்களும் இந்த வீடியோவில் பாருங்கள்..!

    English summary
    a Youtube video courtesy of Makuta VFX, a Hyderabad-based graphics company, explains how some of our favourite scenes from Baahubali were conceptualized, shot and then made to seem like what they finally appeared in the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X