» 

'துப்பாக்கி'யுடன் இந்திய சினிமாவைக் கொண்டாடும் ரஷ்யா...!

Posted by:

சென்னையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் இதேபோல ஒரு விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் நம்ம ஊர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தையும் காட்டுகிறார்களாம்.

டிசம்பர் மாதம் இந்த பட விழா நடைபெறவுள்ளது. தமிழ்ப் படங்கள் தவிர மேலும் பல இந்திய திரைப்படங்களும் கலந்து கொள்ளவுள்ளன.

தமிழிலிலிருந்து 3 படங்கள்

இதில் தமிழிலிலிருந்து கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, தனுஷின் ஆடுகளம், விஜய்யின் துப்பாக்கி ஆகியவை திரையிடப்படுகிறது.

கமல் நேரில் ஆஜராகிறார்

இந்த விழாவில் கமல்ஹாசன் நேரில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷும் போவாராம்

அதேபோல ஆடுகளம் படத்தின் நாயகன் தனுஷும் பட விழாவில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

பாலிவுட் பிரபலங்களும் பராக் பராக்

மேலும் பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகையரும், இயக்குநர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது.

Read more about: indian cinema 100, thuppakki, adukalam, russia, துப்பாக்கி, வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், ரஷ்யா, இந்திய சினிமா 100
English summary
Kamal Hassan's Vettayadu VIlayadu, Vijay's Thuppakki and Danush's Adukalam will represent Tamil Cinema in Russia in the Indian film centenary function to be held during December.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos