twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பார்க்கு துப்பாய படத்தில் விடாமல் விரட்டும் விளையாட்டுப் பேய்.... விரைவில் ரிலீஸ்

    By Mayura Akilan
    |

    சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது பேய் காலமாகிவிட்டது. இன்னும் ஒரு பேய் படம் வளர்ந்து வருகிறது. இது பயங்கர பேய் அல்ல விளையாட்டு பேயாகும். இந்த பேய் ஏன் விரட்டுகிறது என்பதுதான் 'துப்பார்க்கு துப்பாய' திரைப்படத்தின் கதை.

    "விடிவெள்ளி வென்ச்சர்ஸ்" நிறுவனத்தின் சார்பில் ஜானகி தருமராசன் தயாரிக்கும் திரைப்படம், 'துப்பார்க்கு துப்பாய'. இந்த திரைப்படத்தில் மலேசியாவின் பிரபல நடிகர் விகடகவி மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஆனந்தி கதாநாயகி

    ஆனந்தி கதாநாயகி

    ‘ஜோடி நம்பர் ஒன்' புகழ் ஆனந்தி இந்த திரைப்படத்தின் கதாநாயகி. ‘தாரை தப்பட்டை' திரைப்படத்தில் அதிரடி கவர்ச்சி விருந்து படைந்த ஆனந்தி, ‘துப்பார்க்கு துப்பாய' திரைப்படத்தில் அம்சமான வேடத்தில் நடத்துள்ளாராம்.

    செம கெமிஸ்ட்ரி

    செம கெமிஸ்ட்ரி

    காதல் பாடல் காட்சிகளில் ஆனந்திக்கும் மலேசிய கதாநாயன் மகேனுக்கும் மிகச் சிறப்பான கெமிஸ்ட்ரி அமைந்துள்ளதாக‘துப்பார்க்கு துப்பாய' திரைப்படத்தின் குழுவினர் கூறியுள்ளனர். பாடல்களில் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் நடனம் ஆடியுள்ளார், ஆனந்தி. துப்பார்க்கு துப்பாய' திரைப்படத்தில் அபரஜித், ஜெய்கணேஷ், மகாதாரா, தயாளன், ராகவன், கிஷோர், பிரியா, நகினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    வாட்ஸ் ஆப் பேய்

    வாட்ஸ் ஆப் பேய்

    வாட்ஸ் ஆப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தின் அடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள ‘துப்பார்க்கு துப்பாய', நகைச்சுவை கலந்த பேய்ப் படமாக உருவாகி உள்ளது. ஆவி வேடத்தில் நடித்திருப்பவர், புதுமுகம், ரியா. கதாநாயகனையும், அவனது நண்பர்களையும் பேய் ஒன்று விடாமல் விரட்டிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எந்த இடத்துக்கு சென்றாலும் பின்னாலேயே செல்லும் பேய், கதாநாயகன் குழுவினருடன் கண்ணாமூச்சு ஆட்டம் போடுகிறது.

    பேய் ஏன் விரட்டுது

    பேய் ஏன் விரட்டுது

    எதற்கான பேய் விரட்டுகிறது? அப்பாவிப் பெண் அலற வைக்கும் பேயானது எப்படி? கதாநாயகன் பேயிடம் இருந்து எப்படி தப்பினான்? வில்லன்கள் எப்படி இதற்குப் பின்னணியாக இருக்கிறார்கள்? இவை அனைத்துக்கும் நடுவே நாயகன்-நாயகிக்கு காதல் எப்படி நிகழுகிறது? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தரும் வகையில் ‘துப்பார்க்கு துப்பாய' திரைப்படத்தின் திரைப்படத்தின் கதையை பரபரப்பாக அமைத்து இயக்கி இருக்கிறார், ராஜ ராஜ ராஜன்.

    துள்ளலான இசை

    துள்ளலான இசை

    படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ராஜ ராஜ ராஜனின் துள்ளலான வரிகளுக்கு துடிப்பாக இசை அமைத்துள்ளார், டி.கே. இமானுவெல்.
    மலேசியா மற்றும் சிங்கப்பூர் ரசிகர்களை கவரும் வகையில், ‘விகடகவி' மகேன் அதிரடியான ‘ராப்' பாடல் ஒன்றையும் பாடி உள்ளார்.

    தொழில் நுட்ப கலைஞர்கள்

    தொழில் நுட்ப கலைஞர்கள்

    ராஜு நடனம் அமைக்க, ‘சிலம்பம்' சையது சண்டைக் காட்சிகளை உருவாக்கி உள்ளார். திரைப்படத்திற்கு வண்ணமயமான ஒளிப்பதிவு செய்துள்ளார், சோலைராஜா. அருண் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, அட்டகாசமான ‘க்ராபிக்ஸ்' காட்சிகளும் ‘துப்பார்க்கு துப்பாய' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

    குளு குளு ஏரியாவில் படப்பிடிப்பு

    குளு குளு ஏரியாவில் படப்பிடிப்பு

    மைதிலி மகேந்திரன் மற்றும் கலைச்செல்வி சோலைராஜா இணை தயாரிப்பில் உருவாகி உள்ள இந்தப்படம் உதகை, கொடைக்கானல், வேலூர், பெங்களூர் மற்றும் ஆந்திர வனப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இறுதிக் கட்ட பணிகள் நிறைவடைந்து திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளனர்.

    English summary
    THUPPARKKU THUPPAYA movie shooting going on final stage. THUPPARKKU THUPPAYA Tamil comedy-horror film produced by VIDIVELLI VENTURES. Story, script and Direction Raja raja rajan. The film went on floors has been shot in Kodaikanal,Vellore and Bangalore.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X