»   »  இன்று முதல் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி.. ரசிகர்கள் ஆதரவு எந்தப் படத்துக்கு?

இன்று முதல் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி.. ரசிகர்கள் ஆதரவு எந்தப் படத்துக்கு?

Posted by:
Subscribe to Oneindia Tamil

இந்த வாரமும் இரண்டு நேரடித் தமிழ்ப் படங்கள்தான். ஒன்று காஞ்சனா 2, அடுத்து ஓ காதல் கண்மணி.

இரண்டு படங்களுக்குமே வெவ்வேறு தளங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இன்று பாக்ஸ் ஆபீஸில் எந்தப் படம் ஜெயிக்கப் போகிறது என கோடம்பாக்கம் ஆவலோடு காத்திருக்கிறது.


காஞ்சனா 2

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காஞ்சனா பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தை எடுக்க. வேறு படங்களிலும் அவர் நடிக்கவில்லை.


சன் பிக்சர்ஸ்

இந்தப் படத்தை ராகவா லாரன்ஸே தயாரித்திருந்தாலும், படத்தை சன் பிக்சர்ஸ் நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டது. அதை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. எனவே ராகவா லாரன்ஸுக்கு படம் வெளியாகும் முன்பே நல்ல லாபம் கிடைத்துவிட்டது.


350 அரங்குகள்

இன்று 350 அரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது காஞ்சனா 2. லாரன்ஸ் படம் இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுதான் முதல் முறை.


ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி படத்தை மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ளார். துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள், டீசர் என அனைத்தும் மேல்தட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.


படம் எடுபடுமா?

மணிரத்னத்தைப் பொருத்தவரை இது மிக முக்கிய படம். கடைசியாக அவர் சூப்பர் ஹிட் படம் கொடுத்தது பம்பாய்தான். அதன் பிறகு வந்த அலைபாயுதே சுமாராகத்தான் போனது. எனவே இந்தப் படம் ஜெயிக்க வேண்டும் என்பதால் மிகுந்த சிரத்தை எடுத்துள்ளார்.


அவெஞ்சர்ஸ்

இந்த இரு தமிழ்ப் படங்களுடன், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸும் இன்று வெளியாகிறது. படத்தின் தமிழ் டப்பிங் கணிசமான அரங்குகளில் வெளியாகிறது.


English summary
There are only two releases, ie, Kanchana 2 and O Kadhal Kanmani in Kollywood Box office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos