twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன்தாராவினால் நானும் ரவுடிதானை வாங்க டிவி சேனல்களில் கடும் போட்டி

    By Mayura Akilan
    |

    சென்னை: நானும் ரவுடிதான் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக அந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை வாங்க கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மூன்றரை கோடி கொடுத்து படத்தின் உரிமத்தை வாங்க சன்டிவி தயாராக இருக்கிறது. அதே தொகை கொடுக்க விஜய் டிவியும் தயாராக இருக்கிறதாம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காட்டில் கரன்சி மழைதான் என்று வயிற்றெரிச்சல் படுகின்றனர் படத்தின் சேட்டிலைட் உரிமத்தை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்கள்.

    பெரிய ஹீரோக்களின் படங்கள் பூஜை போடும் போதே அந்த படத்தை வாங்க டிவி சேனல்களிடையே போட்டி ஆரம்பமாகிவிடும். தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் நாட்களில் அந்த படத்தை ஒளிபரப்பி அதிக அளவில் விளம்பர வருமானத்தை பெருக்கலாம் என்பது கணக்கு.

    இப்போதெல்லாம் திரைப்படங்களின் தொலைக்காட்சிஒளிபரப்பு உரிமையை வாங்க எந்தத்தொலைக்காட்சியும் முன்வருவதில்லை. தொலைக்காட்சிகளிவ் விளம்பரநேரத்தைக் குறைத்தபிறகு படங்கள் வாங்குவதை எல்லாத் தொலைக்காட்சிகளும் குறைத்துக்கொண்டன அல்லது விட்டுவிட்டன.

    இரண்டு கோடி மூன்றுகோடி என்று விலை பேசப்பட்ட படங்களின் தற்போதைய விலை என்ன தெரியுமா? இருபது இலட்சம், முப்பது இலட்சம்தான். இதுபோன்ற படங்களை வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் அவசரத்தைப் புரிந்து மேலும் விலையைக் குறைத்து வாங்கி வைத்துக்கொண்டு பின்பு அதிகவிலைக்கு விற்பதும் நடக்கிறதென்கிறார்கள். தனுஷ் நடித்த மாரி படத்திற்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக மாரி கதையைப் பற்றி கொஞ்சம் படித்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும்

    மாரி பட தயாரிப்பு கதை

    மாரி பட தயாரிப்பு கதை

    ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவான மாரி படத்தை, லைன் புரட்யூஸராக இருந்து தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துக் கொடுத்தார் தனுஷ். படத்தை எடுப்பதற்கான பணத்தை பேசியபடி கொடுத்துவிட்டார் ராதிகா.அதனால் திட்டமிட்டபடி படத்தை முடித்துவிட்டார் தனுஷ்.

    சம்பள பாக்கி

    சம்பள பாக்கி

    தனுஷுக்குக் கொடுக்க வேண்டிய 8 கோடி சம்பளத்தை மட்டும் ராதிகா தரவில்லையாம். சம்பளத்தைக் கேட்டபோதெல்லாம் மாரி படம் பிசினஸ் ஆகவில்லை என்று ராதிகா அழுகுணி ஆட்டம் ஆட, கடுப்பான தனுஷ், மாரி படத்தை ராதிகாவினால் வெளியிட முடியாதபடி, படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் வேலைகளை முடிக்காமல் பாக்கி வைத்தாராம்.

    பஞ்சாயத்து பேசிய ராதிகா

    பஞ்சாயத்து பேசிய ராதிகா

    இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சில முக்கியஸ்தர்களை வைத்து தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ராதிகா. சம்பள பாக்கியைக் கொடுத்தால்தான் படத்தை தருவேன் என்று கறாராக சொல்லிவிட்டார் தனுஷ்.

    மாரி சேட்டிலைட் ரைட்ஸ்

    மாரி சேட்டிலைட் ரைட்ஸ்

    இன்னொரு பக்கம், மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஏதாவது ஒரு சேனலில் தள்ளிவிட பெரும் முயற்சி செய்தார். எதுவும் வொர்க்அவுட்டாகவில்லை. சன் டிவி, விஜய் டிவி என முன்னணி சேனல்கள் அடிமாட்டுவிலைக்குக் கேட்டதால் கொடுக்க மறுத்தார் ராதிகா.

    தவித்த தனுஷ்

    தவித்த தனுஷ்

    தனுஷுக்குக் கொடுக்க வேண்டிய 8 கோடி சம்பளத்துக்கு ஈடாக மாரி படத்தின் சாட்டிலைட் உரிமையை எழுதிக் கொடுத்தார்.அதன் பிறகே ‘மாரி' படம் வெளியானது. மாரி வெளியாகி வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும், பல மாதங்களாகியும் தன் வசமிருந்த மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் தனுஷ்.

    நஷ்டத்திற்கு விற்பனை

    நஷ்டத்திற்கு விற்பனை

    தனுஷே தேடி வந்து கேட்டதால் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு கடைசியில், 3.5 கோடிக்கு மாரி சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிக் கொள்வதாக சொன்னது விஜய் டிவி. வேறுவழியில்லாமல் விஜய் டிவியிடம் மாரியைவிற்றுவிட்டார் தனுஷ். 8 கோடிக்கு தனுஷ் தலையில் கட்டப்பட்ட மாரி படத்தின் சாட்டிலைட் ரைட்ஸால் அவருக்கு 4.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் படத்தை வாங்கிய கையோடு தீபாவளிக்கு ஒளிபரப்பியது விஜய் டிவி.

    டிவி சேனல்கள் போட்டி

    டிவி சேனல்கள் போட்டி

    ஒரு படம் ஒடிவிட்டால் அதன் நிலை வேறு. அண்மையில் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நானும் ரவுடிதான் படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக சுமார் மூன்றரைகோடி வரை தரத்தயாராக இருக்கிறதாம் சன் டிவி நிறுவனம். இப்போது தனுஷ் நேரம் என்பதால் அமைதி காக்கிறார்.

    விஜய் டிவி விருப்பம்

    விஜய் டிவி விருப்பம்

    பெரிய தொகை கொடுத்துப் படத்தை வாங்க விஜய்தொலைக்காட்சியும் போட்டிபோடுகிறதாம். ஆனால் அவர்கள் தருவதாகச் சொல்லும் விலையைவிட அதிகமாக எதிர்பார்க்கிறாராம் தனுஷ். இதனால் அந்த வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறதென்கிறார்கள். எல்லாம் நயன்தாராவின் மகிமை என்கின்றனர்.

    English summary
    Naanum Rowdy Thaan Movie Sattilite rights not sold out still. Vighnesh Sivan directional, Vijay Sethupathi & Nayanthara as leads in the Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X