»   »  முதலில் காதல்... இப்போ டுவிட்டரில் மோதல் சமந்தா, சித்தார்த்

முதலில் காதல்... இப்போ டுவிட்டரில் மோதல் சமந்தா, சித்தார்த்

Posted by:
Subscribe to Oneindia Tamil

உருகி உருகி காதலித்து பின்னர் கசந்து போய் பிரிந்த காதல் ஜோடி சித்தார்த், சமந்தா இப்போது டுவிட்டரில் பகிரங்கமாக மோதிக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனராம்.

சினிமாவில் உருகி உருகி காதலிப்பதும் அந்த காதலுக்காக உயிரையே கொடுக்கத் துணிவதும் புதிய விசயமல்ல. ஆனால் சினிமா நடிகர்களின் காதல், அந்த அளவிற்கு சீரியசானதல்ல. காதல் கிசுகிசுவில் சிக்கும் ஒரு சில நடிகர்களே தாங்கள் காதலித்த நடிகையை திருமணம் செய்து கொள்கின்றனர்.

சித்தார்த் - சமந்தா

சிறு வயது முதலே நட்பாக இருந்த சித்தார்த், சமந்தா ஜோடி சினிமாவில் பிரபலமான பின்னர் காதலாக கனிந்தது. இருவரும் ஜோடியாக கோவிலுக்குப் போய் பரிகாரம் எல்லாம் செய்தனர். விளம்பரங்களில் இந்த ஜோடியை வைத்து ஸ்பெஷலாக எடுத்து பிரபலப்படுத்தினர்.

காதலில் விரிசல்

சித்தார்த் நடித்த படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினாராக எல்லாம் சமந்தா பங்கேற்றது பரபரப்பாக எழுதப்பட்டது. பிறகு என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ ஒரு கட்டத்தில் இவர்களின் காதலில் விரிசல் ஏற்பட பிரிந்தே விட்டனர்.

பிரிந்த காதலர்கள்

எந்த சத்தமும் இல்லை யாரும் யாரைப்பற்றியும் குறை சொல்லவில்லை அவரவர் அவர்களின் வேலையை செய்து கொண்டு இருக்கின்றனர். இதில் திடீரென கல்லெறிந்து இருக்கிறார் சித்தார்த்.

டுவிட்டரில் சித்தார்த்

டுவிட்டரில் சில தினங்களுக்கு முன், "எனக்கு ஒரு மோசமான விசயம் நடத்ததா நினைச்சிட்டு இருந்தேன், ஆனால் ஒரு தருணத்திலதான் அப்படி நடந்தது நல்ல விசயம்னு எனக்கு புரிஞ்சது" என்று பதிவிட்டிருந்தார்.

சமந்தா பதிலடி

இது யாருக்கு எதுக்கு சொன்ன விசயம் என்று அவரது ரசிகர்கள் குழப்பத்தில் இருக்க, சமந்தாவோ, தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த ஒரு தருணத்திலதான் எனக்கு நீ யாரோ ஒருத்தன்கிறது புரிஞ்சது என்று பதிவிட்டார். பின்னர் அதை சில நிமிடங்களிலேயே நீக்கிவிட்டார்.

பகிரங்க மோதல்

ரசிகர்கள்தான் தங்களின் மோதலை டுவிட்டரில் பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர். ஆனால், நடிகர், நடிகைகளும் தங்களின் காதல், மோதல் சண்டைகளை இப்படி பகிரங்கமாக டுவிட்டரில் வெளிப்படுத்துகின்றனரே என்று கூறியுள்ளனர் ரசிகர்கள்.

English summary
Actor Siddarth said in his twitter page, "that moment when you realise that what you thought was the worst thing that happened to you is actually the best thing that happened to you".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos