Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உதயநிதியின் கெத்துக்கு ஈடு கொடுப்பாரா எமி ஜாக்சன்
உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்க உள்ள படத்துக்கு கெத்து என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடிக்க உள்ளாராம்.
உதயநிதி தற்போது நண்பேன்டா படத்தில் நயன்தாரா உடன் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அகமது இயக்கும் இதயம் முரளி படத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார் என்பது ஊரறிந்த விசயம்.
ஹன்சிகா ஜோடி
இதயம் முரளி படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். காமெடி ரோலில் தம்பி ராமையா நடிக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.
மான்கராத்தே இயக்குநர்
இதனிடையே உதயநிதி மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை திருக்குமரன் இயக்க உள்ளார். இவர், சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்த மான் கராத்தே படத்தை இயக்கியவர்.
கெத்து காட்டப்போகும் உதயநிதி
படத்திற்கு கெத்து என்கிற தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். ‘மைனா' சுகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
எமி ஜாக்சன் ஜோடியாக
நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதியே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
5வது படம்
நண்பேன்டா, இதயம் முரளி படங்களைத் தொடர்ந்து உதயநிதி இந்தப் படத்தில் நடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.