twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பா- மகனுக்கு இடையேயான உறவே கெத்து... இயக்குநர் திருக்குமரன்

    By Manjula
    |

    சென்னை: ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உறவைத் தான் கெத்து படத்தில் காட்டியிருக்கிறேன் என்று படத்தின் இயக்குநர் திருக்குமரன் தெரிவித்து இருக்கிறார்.

    ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா போன்ற படங்களில் காமெடி நாயகனாக நடித்திருந்தார்.

    Udhayanidhi Stalin's Gethu Release for Pongal

    ஆனால் காமெடி அவருக்குக் கைகொடுக்கவில்லை இதனால் கெத்து படத்தின் மூலம் தற்போது ஆக்ஷன் பாதைக்கு திரும்பியிருக்கிறார்.

    இந்தப் படத்தில் இவருடன் இணைந்து எமி ஜாக்சன், சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாகும் கெத்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், விஷாலின் கதகளி மற்றும் பாலாவின் தாரை தப்பட்டை ஆகிய படங்களுடன் மோதுகிறது.

    பொங்கல் ரேஸில் இருந்து அரண்மனை 2 பின்வாங்கியதால் தனது படத்தை பொங்கலுக்கு துணிந்து களமிறக்குகிறார் உதயநிதி.இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் திருக்குமரன் படத்தின் கதை பற்றி தெரிவித்திருக்கிறார்.

    அவர் கூறும்போது "அப்பா - மகனுக்கு இடையேயான பாசம், நேசம் ஆகியவற்றைப் பற்றிய கதையே கெத்து. இந்தப் படத்தில் உதயநிதி அப்பாவிடம் மிகுந்த அன்பு கொண்டவராக நடித்திருக்கிறார்.

    Udhayanidhi Stalin's Gethu Release for Pongal

    இந்தப் படத்தில் அப்பா - மகன் இருவரும் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கின்றனர். அந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா?இல்லையா? என்பதை ஆக்ஷன் கலந்து கொடுத்திருக்கிறேன்" என்று திருக்குமரன் கூறுகிறார்.

    சிவகார்த்திகேயனின் மான் கராத்தே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் திருக்குமரன்.

    English summary
    Father-Son Relationship based by the story. Udhayanidhi acted in the film was a great deal of Affection" Gethu Director Thiru Kumaran Reveals the plot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X