twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகம் சுற்றும் வாலிபனும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்படுகிறது!

    By Shankar
    |

    முன்பெல்லாம் புத்தம் புதிய காப்பி என பழைய படங்களை வெளியிடுவார்கள். இப்போது அதற்கு பதில் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

    எம்ஜிஆர், சிவாஜியின் பழைய படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து வெளியிடுவதை ஒரு வழக்கமாக மாற்றிவிட்டனர்.

    சிவாஜி கணேசனின் கர்ணன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகி சாதனைப் படைத்தது.

    ஆயிரத்தில் ஒருவன்

    ஆயிரத்தில் ஒருவன்

    அடுத்து1965-ல் வெளியான எம்ஜிஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன்' டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் குவித்தது. சென்னையில் சங்கம், ஆல்பட் தியேட்டர்களில் 175 நாட்களைத் தாண்டி ஓடியது.

    உலகம் சுற்றும் வாலிபன்

    உலகம் சுற்றும் வாலிபன்

    இதையடுத்து எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய ‘உலகம் சுற்றும் வாலிபன்' படமும் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒலி, ஒளி டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தரமானதாக மாற்றப்பட்டு வருகிறது.

    விஞ்ஞானி எம்ஜிஆர்

    விஞ்ஞானி எம்ஜிஆர்

    இந்த படம் 1973-ல் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இரு வேடங்களில நடித்திருந்தார். ஒருவர் விஞ்ஞானி. மின்னலை ஒரு சிறு மாத்திரைக்குள் சிறைப்பிடித்து, அதை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெற்றிகரமான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அவரிடமிருந்து அந்த பார்முலாவை கடத்தப் பார்க்கும் கும்பல், அதிலிருந்து அவர் மீண்டு வருவது என சர்வதேச லெவல் கதை.

    மூன்று நாயகிகள்

    மூன்று நாயகிகள்

    நாயகிகளாக லதா, சந்திர கலா, மஞ்சுளா நடித்திருந்தனர். அசோகன், ஆர்.எஸ். மனோகர், நம்பியார் ஆகியோர் வில்லன் கேரக்டரில் வந்தார்கள். நாகேஷ் காமெடி வேடத்தில் நடித்தார்.

    இனிய பாடல்கள்

    இனிய பாடல்கள்

    இந்தப் படத்தில் இடம் பெற்ற,

    'இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..'
    ‘லில்லி மலருக்கு கொண்டாட்டம்', '
    ‘பன்சாயி.. காதல் பறவைகள்'
    ‘நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ',
    ‘அவள் ஒரு நவரச நாடகம்',
    ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ',
    ‘சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரfக்க வாழ்ந்திடாதே',
    ‘தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே',
    ‘உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம்‘,

    -போன்ற பாடல்கள் இன்றும் கேட்கும்போதெல்லாம் புத்தம்புதிதாய் தோன்றும்.

    எம்ஜிஆர் ரசிகர்கள்

    எம்ஜிஆர் ரசிகர்கள்

    உலகம் சுற்றும் வாலிபன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் மீண்டும் திரைக்கு வருவது, எம்ஜிஆர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    Read more about: mgr எம்ஜிஆர்
    English summary
    MGR fans eagerly waiting for the release of the digital format Ulagam Sutrum Vaaliban.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X