twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் ஹாஸன் பிறந்த நாளில் உத்தம வில்லன் வெளியீடு

    By Shankar
    |

    கமல்ஹாசன் பிறந்த நாளில் உத்தம வில்லன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கமல் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்'. கதாநாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    நவம்பர் 7

    நவம்பர் 7

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வரும் நவம்பர் 7-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    பிறந்த நாள்

    பிறந்த நாள்

    அன்றுதான் கமல் ஹாஸனுக்கு பிறந்த நாள் வருகிறது. தங்கள் அபிமான நாயகனின் பிறந்த நாளன்றே அவர் நடித்த படமும் வெளியாவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    கே பாலச்சந்தர்

    கே பாலச்சந்தர்

    ‘உத்தமவில்லன்' படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இரண்டு காலக்கட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயராம், நாசர், இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், பார்வதி மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    விஸ்வரூபம் 2

    விஸ்வரூபம் 2

    இப்படத்தை தொடர்ந்து கமல் தற்போது ‘திரிஷ்யம்' படத்தின் ரீமேக்கான ‘பாபநாசம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக, கமல் நடித்து முடித்துள்ள ‘விஸ்வரூபம்-2' படத்தை அடுத்த வருடம் ஜனவரியில் வெளியிடவுள்ளனர்.

    English summary
    Kamal's Uthama Villain will be released on November 7.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X