»   »  தீர்ந்தன வழக்குகள்.. விரைவில் வரும் வாலு.. சிம்பு டிவிட்!

தீர்ந்தன வழக்குகள்.. விரைவில் வரும் வாலு.. சிம்பு டிவிட்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிம்பு - ஹன்சிகா நடிப்பில் இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியிருக்கும் வாலு படம் விரைவில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன்பு அறிவித்திருக்கிறார் நடிகர் சிம்பு.

இந்த முறையாவது வாலு வெளியாகுமா? என்று சந்தேகத்துடன் இனிமேல் இருக்க வேண்டாம் வாலு மீதான வழக்குகள் அனைத்தும் தீர்க்கப் பட்டுவிட்டன, எனவே இந்த முறை படம் கண்டிப்பாக திரையைத் தொடும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.


வழக்குகள் அனைத்தும் தீர்க்கப் பட்டு விட்டாலும் வெளியீட்டுத் தேதியை நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வந்தவுடன் தான் அறிவிக்க வேண்டும் என்பதால் தேதியை குறிப்பிடாமல் அதிவிரைவில் என்ற வாசகங்களுடன் தற்போது படத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.ஆகஸ்ட் 14ம் தேதியில் படம் வெள்ளித்திரைகளில் வெளியாக இருக்கிறது இதனால் சந்தோஷமாக இருக்கும் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் " வாலு படத்தின் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன, கடவுளுக்கு நன்றி. மேலும் எனக்காக வேண்டிக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் " என்று ட்வீட்டி இருக்கிறார்.


மேலும் ஆகஸ்ட் 14 ல் படம் வெளியாகும் என்று மீடியாக்கள் வெளியிட்ட செய்தியையும் ரீட்வீட் செய்து மகிழ்ந்திருக்கிறார் சிம்பு, சிம்பு இப்போ ஹேப்பி அண்ணாச்சி...சுதந்திர தினத்தில் வாலுவுக்கு ரிலீஸ் கிடைத்திருக்கிறது...


English summary
Vaalu Release Date Confirmed, Simbu's Movie Released on August 14.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos