»   »  ஜி.வி. பிரகாஷ் படத்தில் வடிவேலு: பிக்கப்பான செகன்ட் இன்னிங்ஸ்

ஜி.வி. பிரகாஷ் படத்தில் வடிவேலு: பிக்கப்பான செகன்ட் இன்னிங்ஸ்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செகன்ட் இன்னிங்ஸ் துவங்கியுள்ள வடிவேலு ஜி.வி. பிரகாஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார் வைகைப் புயல் வடிவேலு. அந்த கேப்பில் பல காமெடியன்கள் வந்து வளர்ந்தனர்.

இருப்பினும் யாராலும் வடிவேலுவின் இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் வடிவேலு திரும்பி வந்துள்ளார். விஷாலின் கத்திச் சண்டை படத்தில் நடித்துள்ளார்.

Vadivelu bags yet another movie offer

மேலும் பி. வாசு ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங்கை வைத்து இயக்கி வரும் சிவலிங்கா படத்திலும் வடிவேலு நடிக்கிறார். இந்நிலையில் சந்தானத்தை ஹீரோவாக வைத்து தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா ஜி.வி. பிரகாஷை ஹீரோவாக வைத்து படம் எடுக்க உள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் தற்போது பிசியாக இருப்பதால் அவரது வேலைகளை முடித்த பிறகு தனது படத்தை துவங்குகிறார் ராம்பாலா. ராம்பாலா தனது படத்திற்கு காமெடியனாக வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளார்.

வடிவேலு திரும்பி வந்த வேகத்தில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆவது பிற காமெடியன்களை சற்று அஞ்ச வைத்துள்ளது.

English summary
Vadivelu has bagged a movie in which music director turned actor GV Prakash will be the hero.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos