»   »  எதிர் அணியில் உள்ளவர்களுக்கும் விஷால் அணிக்கு வாங்கப்பு!- வடிவேலு

எதிர் அணியில் உள்ளவர்களுக்கும் விஷால் அணிக்கு வாங்கப்பு!- வடிவேலு

Posted by:
Subscribe to Oneindia Tamil

சரத்குமார் அணியில் உள்ள நடிகர்களும் விஷால் அணிக்கு வந்துவிட வேண்டும் என்று நடிகர் வடிவேலு கூறினார்.

விஷால் தலைமையில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது.

Vadivelu's campaign for Vishal Team in Nadigar Sangam

இதில் பல நாடக கலைஞர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலர் கலந்துக் கொண்டனர். இதில் ஒவ்வொருத்தராக பாண்டவர் அணி வெற்றி பெற வாழ்த்துக்கூறி பேசினர்.

வடிவேலு பேசும்போது, ‘‘நடிகர் சங்கம் பற்றி கேள்வி கேட்டால் அவதூறாக பேசுகிறார்கள். நோட்டீஸ் அனுப்புறாய்ங்க. இது நியாயமா... எதிரணியில் உள்ளவர்கள் விஷால் அணியில் சேர வேண்டும் இது என்னுடைய வேண்டுகோள்,'' என்றார்.

இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் பேசும்போது, ‘‘விஷால் அணி சக்கரவல்லி கிழங்கு போன்றவர்கள். சக்கரவல்லி கிழங்கு பூமி உடைத்துக்கிட்டு வெளியே வருவதுபோல் விஷால் அணி செயல்படுகிறது. ஆகவே பாண்டவர் அணி வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.

இயக்குநர் - நடிகர் பாக்யராஜ் பேசும்போது, "பாண்டவர் அணி அழுக்கற்ற அணி. இவர்கள் மீது எந்த குறையும் சொல்ல முடியாது. நாடக நடிகர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அதற்கு பாண்டவர் அணி ஜெயிக்க வேண்டும்," என்றார்.

English summary
Actor Vadivelu asked Sarathkumar team supporters to Vishal side in Nadigar Sangam election.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos