twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பணம் பணம் என ஓடும் மக்களே, இதை முதலில் படிங்க!

    By Siva
    |

    சென்னை: பணத்திற்கு கொடுக்கும் மதிப்பை மக்கள் குடும்ப உறவுகளுக்கு கொடுப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஊர், உலகம் எல்லாம் பணம் பணம் என்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் வாழ்வில் பல சந்தோஷங்களை தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

    இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் ஃபேஸ்புக் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

    உண்மை சம்பவம்

    உண்மை சம்பவம்

    நேற்று பிரபஞ்சன் தலைமையேற்ற கவிஞர் நரனின் லாகிரி கவிதை விமர்சனக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

    அப்போது பிரபஞ்சன் ஒரு உண்மை சம்பவத்தை கூறினார்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மனைவியின் இறப்புக்கு பிறகு அப்பா தனியாக வாழ்கிறார். தனிமை அவரை தொந்தரவு செய்கிறது.

    மகன்

    மகன்

    வாரம் ஒரு முறை பேசும் மகனிடம் சொன்னார். தம்பி! உங்க அம்மா போன பிறகு இங்க தனியா இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு...அங்க அமெரிக்கா வந்து உன்னோட இருந்தன்ன பேரபிள்ளைகளை பார்த்துக்கொண்டு சந்தோசமாயிருப்பேன். நான் தனியா தான
    இங்க இருக்கேன். அங்க வந்துர்றேன் என்று சொல்லி முடிப்பதற்குள் மகன் பேச்சை மறுத்தான். No No No No No No daddy. Death is very costly affair here.no... no...ஏகப்பட்ட பார்மாலிட்டிஸ் here.

    இந்தியா

    இந்தியா

    நீங்க அங்க இந்தியாலயே இருங்க மாதம் ரெண்டாயிரம் சேத்து அனுப்புறேன். புத்தகங்களை வாங்கி படிங்க.சினிமாக்கு போங்க.பூங்காக்கு போங்க.கோயில் கொளத்துக்கு போங்க...எவனாவது வடஇந்தியா டூர் போட்டு இருப்பான் போயிட்டு வாங்க.நெட்டுல பாத்துட்டு வேணா நான் சொல்றேன்...என்று மகன் பேசி முடித்தான். அப்பாக்கு குரல் கிணற்றுக்குள் போயிவிட்டது. அப்பா போன வெச்சுறேன் ஆபிஸ் கால் ஒன்னு வருது என்றபடி மகன் போனை வைத்துவிட்டான்.

    அப்பா

    அப்பா

    அந்த அப்பா கண்ணீர் விட்டபடியே இந்த நிகழ்வை பிரபஞ்சனிடம் கூறினாராம். பிரபஞ்சன் சொன்னார் ஒவ்வொரு உயிரும் தனியானது. மகன் என்றாலும் அவன் தனி மனிதன் தான். பணம் சம்பாரிக்க வேண்டும் என்று பள்ளி வீடு சமுதாயம் அனைவரும் சொல்லிக் கொடுத்தோம். உறவுகள் முக்கியமுன்னு சொல்லி கொடுக்க மறந்து விட்டோம். அதனால் டாலர்களை பார்த்தவண்ணம் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்றாராம்.

    எதை விதைத்தோமோ அதை தான் அறுக்கமுடியும்.

    English summary
    Director Vasantha Balan's facebook post about a real incident is very touching and true.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X