twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சரக்கில்லாமல் ராஜேஷால் படமெடுக்க முடியாதா சமூகவலைதளங்களில் அதிகரிக்கும் எதிர்ப்புகள்

    By Manjula
    |

    சென்னை: தமிழ்நாட்டில் மதுவிலக்கு மற்றும் அது தொடர்பான போரட்டங்கள் நாளுக்கு நாள் வெடித்துக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு படம் தேவையா? என்று இயக்குநர் ராஜேஷை சமூக வலைதளங்களில் பயங்கரமாக வறுத்து எடுத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

    ராஜேஷின் கதைகளில் கதை இருக்கிறதோ கண்டிப்பாக டாஸ்மாக் இருக்கும் மொத்த படத்தில் முக்கால்வாசி பகுதியை அங்குதான் ஷூட்டிங் எடுப்பார் போல என்று சொல்லுமளவிற்கு தண்ணி கரைபுரண்டு ஓடும் அவரது படங்களில்.

    ஆனால் ராஜேஷின் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களை விடவும் இன்று வெளியாகியிருக்கும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தில் சரக்கு வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறதாம்.

    படத்தில் வரும் அனைவருமே குடிக்கின்றனர் நாயகி தமன்னாவும் அதற்கு விதிவிலக்கல்ல, படத்தில் குடிப்பது போல வரும் காட்சிகளை கட் செய்து பார்த்தால் படத்தில் ஒன்றிரண்டு காட்சிகள் தான் மிஞ்சும் போல.

    இந்தக் காலத்தில் எந்த இளைஞனும் இந்த அளவிற்கு குடிப்பது இல்லை என்று இளைஞர்களே ஆத்திரப்படும் அளவிற்கு படத்தில் டாஸ்மாக் காட்சிகள் வருகிறது என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

    சமூக வலைதளங்களில் ராஜேஷிற்கு எதிராக கொந்தளித்த சில பேரின் ட்விட்டர் பதிவுகள் இவை.

    வாசுவும் சரவணனும் ஒண்ணாக் குடிச்சவங்க

    வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க என்ற தலைப்பிற்குப் பதிலாக வாசுவும் சரவணனும் ஒண்ணாக் குடிச்சவங்க என்று வைத்திருக்கலாம் என்று ராஜேசைச் சாடியிருக்கிறார் பாலா.

    சரக்கில்லாமல் ராஜேஷின் வாழ்க்கை இல்லை

    சந்தோஷமா இருந்தாலும் சரக்கடிப்போம், துக்கமா இருந்தாலும் சரக்கடிப்போம் சும்மா இருந்தாலும் சரக்கடிப்போம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க புல் சரக்கு என்று கூறியிருக்கிறார் ராஜேந்திரன்.

    படம் முழுக்க பாரும், பீரும் தான்

    இயக்குநர் ராஜேஷின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க மற்றுமொரு டாஸ்மாக் காவியம், படம் முழுக்க பாரும் பீரும் தான் என்று வெறுத்து சொல்லியிருக்கிறார் பரம்பொருள்.

    இவங்கள தடை பண்ணினாலே நிம்மதிதான்

    மதுவிலக்கு கொண்டு வாறீங்களோ இல்லையோ முதல்ல இந்த மாதிரி படங்களைத் தடை பண்ணுங்கப்பா என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் புருஸ்லீ.

    கதையை விட தண்ணி அதிகம்

    ஒரே வரியில் சரக்குல(கதை) தண்ணி அதிகம் என்று ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் ஆரோரான்.

    இனிமேலாவது ராஜேஷ் சரக்கில்லாமல் கதையை நம்பி படம் எடுப்பாரா பார்க்கலாம்..

    English summary
    Why Director Rajesh Always Using Tasmac Scenes - Now Fans Asking this Type of Questions in Social Networks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X