»   »  மணமகளாக பேய்... திருமணத்தை நிறுத்த 13 பேய்கள் கூட்டணி... ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’!

மணமகளாக பேய்... திருமணத்தை நிறுத்த 13 பேய்கள் கூட்டணி... ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவைப் பிடித்து ஆட்டிப் படைத்து வரும் பேய்ப்பட வரிசையில் புதிதாக இணைந்துள்ளது ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி'.

மற்ற படங்களில் எல்லாம் நாயகி பேயாக வந்து வில்லன்களை துரத்தித் துரத்திக் கொலை செய்வார். ஆனால், இப்படத்தில் பேய்க்கும் பேய்க்கும் தான் நிஜமாகவே சண்டையாம்.

ஆம், இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் பெண் பேய், அதனை தடுக்க கூட்டணி சேரும் 13 பேய்கள், இது தான் படத்தின் கதைக்களம்.

இரவு பகலாக ஷூட்டிங்...

இப்படத்தை புகழ்மணி இயக்குகிறார். சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் இரவு பகலாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

பேய் நாயகி...

இப்படத்தில் ரத்தன் மவுலி ஹீரோவாக நடிக்க, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ராவியா திகில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

 

 

நட்சத்திரப் பட்டாளம்...

இவர்கள் மட்டுமின்றி சுஜாகுமார், ராம்ஜி, சித்ரா லட்சுமணன், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், வையாபுரி, ரேகா, நிரோஷா, மதுமிதா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

13ம் தேதி...

இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் புகழ்மணி கூறுகையில், "உலகம் முழுவதும்13ம் தேதி வெள்ளிக்கிழமை என்றால் திகில் நாளாக கருதி பயப்படுகின்றனர். அப்படி வரும் ஒரு நாளில் தனது திருமணத்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான் ஹீரோ.

 

 

பேய்களின் கூட்டுச்சதி...

மணப்பெண் உருவத்தில் ரத்தவெறி பிடித்த பேய் வந்து நிற்கிறது. அந்த திருமணத்தை தடுக்க 13 பேய்கள் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றன.

இது தான் கதை...

பேய்களின் இந்த அட்டகாசம் ஏன்? 13ம் தேதியை நாயகன் திருமணம் செய்ய தேர்வு செய்தது எதற்காக? இதை வைத்து தான் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Vellikizhamai 13am Thethi Movie is an upcoming tamil horror movie directed by Pugalmani.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos