»   »  'ஸேஃபாக விளையாடும்' வெங்கட் பிரபு!

'ஸேஃபாக விளையாடும்' வெங்கட் பிரபு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

மங்காத்தா, மாசு என ஆக்ஷன் கமர்ஷியல்களுக்கு சற்றே பிரேக் விட்டிருக்கும் வெங்கட் பிரபு, சென்னை 28 இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் லைட் காமெடிக்குத் திரும்பியுள்ளார். சென்னை 28 இரண்டாம் பாகம் வெற்றிக் கோட்டைத் தொட்ட திருப்தியில் தனது அடுத்த படத்தின் பூஜையையும் நேற்றே போட்டுவிட்டார்.

இந்தப் படத்தை டி சிவா தயாரிக்கிறார். சென்னை 28 இரண்டாம் பாகத்தை அவர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். இந்தப் புதுப் படத்தை அவரே தயாரிக்கிறார்.


Venkat Prabhu's 'safe play'

கடவுள் இருக்கான் குமாரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தபோதே இந்த அறிவிப்பை டி.சிவா ஏற்கெனவே வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.


வெங்கட் பிரபுவுக்கு இது 8-வது படம். இந்தப் படத்திலும் அவரது வழக்கமான டீம்தானாம். ஆனால் நாயகன் நாயகி யார் என்பதை மட்டும் கொஞ்சம் சஸ்பென்சாக வைத்திருக்கிறாராம்.

English summary
Venkat Prabhu has started work for his 8th movie after tasted success in Chennai 28-II
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos