twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெஞ்சுவலி... இந்தி நடிகர் சசிகபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதி

    |

    மும்பை: நெஞ்சு வலி காரணமாக பிரபல இந்தி நடிகர் சசிகபூர் நேற்று மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    கடந்த 1960 - 70 ஆண்டு வாக்கில் இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் சசிகபூர். பிரபல கவுர் குடும்பத்தைச் சேர்ந்த சசிகபூர், தனது சிறு வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார்.

    நடிகராக மட்டுமின்றி பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் சசிகபூர்.

    Veteran actor Shashi Kapoor hospitalised due to chest infection

    116 திரைப்படங்கள்....

    இதுவரை சசிகபூர் சுமார் 116 இந்திப் படங்களில் நடித்துள்ளார். அதில் 61 படங்கள் தனி கதாநாயகனாகவும், 55 படங்களில் பல கதாநாயகர்களுடன் நடித்து உள்ளார்.

    3 தேசிய விருதுகள்...

    21 படங்களில் துணை நடிகர் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்து உள்ள சசிகபூர், 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளை பெற்று உள்ளார்.

    நெஞ்சுவலி...

    தற்போது 76 வயதாகும் சசிகபூருக்கு நேற்று திடீரென கடுமையான இருமலும், அதனைத் தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சசிகபூருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால், மேற்கு அந்தேரி புறநகரில் உள்ள கோகிலபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவசரச் சிகிச்சைப் பிரிவு...

    தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளார் சசிகபூர். அங்கு அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    குடும்பம்...

    சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர்.இவரது மனைவி ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Yesteryear actor Shashi Kapoor has been hospitalised in a Mumbai hospital after he complained of cough and breathlessness.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X