twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் முழுமதி, எங்களின் இளைய தளபதி... இணையத்தைத் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்

    By Manjula
    |

    சென்னை: நடிப்புலகில் வெற்றிகரமாக 23 வருடங்களைக் கடந்த நடிகர் விஜய் பற்றி அவர்களது ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களை தெறிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

    இந்த 23 வருடங்களில் அவர் கடந்து வந்த பாதை, படங்கள், சக நடிகர்கள் என்று முக்கியமான பலதையும் தொகுத்து இந்த வீடியோவை உருவாக்கி இருக்கின்றனர்.

    நாளைய தீர்ப்பு முதல் தெறி வரை நீளும் இந்த வீடியோவில் இருந்து சில சுவாரசியங்களை காணலாம்.

    நாளைய தீர்ப்பு

    நாளைய தீர்ப்பு

    1992 ம் வருடம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான முதல் படம் நாளைய தீர்ப்பு. அதற்கு அடுத்த வருடத்தில் நடிகர் விஜயகாந்துடன் இவர் இணைந்து நடித்த செந்தூரப்பாண்டியின் மூலம் விஜய் முதல்முறையாக வெற்றியை ருசித்தார்.

    பூவே உனக்காக

    பூவே உனக்காக

    1996 ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கோயம்புத்தூர் மாப்பிள்ளை வெற்றிப் படமாக மாறினாலும் விஜய்க்கு என்று ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் பூவே உனக்காக தான். காதலுடன், காமெடியை அளவாக மிக்ஸ் செய்து விக்ரமன் இயக்கிய இப்படம் வெளியாகி 20 வருடங்களைக் கடந்தும் கூட இன்றும் தமிழ் சினிமாவின் விரும்பத்தகுந்த ஒரு படமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் விஜய் பேசிய "ஒரு செடியில் ஒரு பூ பூக்கும்" டயலாக்கை அடித்துக் கொள்ளவே முடியாது.

    காதலுக்கு மரியாதை

    காதலுக்கு மரியாதை

    காதல் தோல்விக்கு பூவே உனக்காக என்றால் காதலின் வெற்றிக்கு காதலுக்கு மரியாதை படத்தை சிறந்த அடையாளமாக கூறலாம். அடிதடி ஆக்ஷன் இல்லாமல் அமைதியான ஹீரோவாக விஜய் நடித்து வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனைகளைப் படைத்தது.இதே போன்று துள்ளாத மனமும் துள்ளும் படமும் வசூலில் பல சாதனைகளைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

    வரிசையாக

    வரிசையாக

    2௦௦௦ மற்றும் 2001 ம் ஆண்டுகளில் குஷி, பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி என்று வரிசையாக 4 ஹிட்களைக் கொடுத்து ஹிட் ஹீரோ பட்டியலில் இடம்பிடித்தார் விஜய்.

    திருமலை

    திருமலை

    இடையில் சில தோல்விகளால் சோர்ந்து போயிருந்த விஜய்யை திருமலை மீட்டுக்கொண்டு வந்தது. இந்தப் படத்தில் இருந்துதான் தமிழ் சினிமாவின்
    மாஸ் ஹீரோ அந்தஸ்து விஜய்க்கு கிடைத்தது. தொடர்ந்து வெளியான கில்லி, போக்கிரி, திருப்பாச்சி படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படங்களாக மாறின. அதிலும் கில்லி படம் தமிழ்நாட்டில் 175 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து சுமார் 50 கோடிகள் வரை பாக்ஸ் ஆபீஸில் வசூலித்தது.

    துப்பாக்கி

    துப்பாக்கி

    சிவாஜி, எந்திரன் படங்களுக்குப் பின் தமிழ் சினிமாவின் 100 கோடிகளைத் தொட்ட படம் என்ற சாதனையை துப்பாக்கி படைத்தது. பின் இதே முருகதாஸ்- விஜய் கூட்டணியில் வெளியான கத்தி படமும் இந்த சாதனையைப் படைத்து விஜய்யின் அந்தஸ்தை உயர்த்தியது.

    தெறி

    தெறி

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புலி சொதப்பினாலும் கூட தற்போது அதனை ஈடுகட்டி வெற்றிப் பாதைக்கு திரும்ப தெறி படத்தில் தற்போது கடுமையாக உழைத்து வருகிறார் விஜய்.

    23 இயக்குனர்கள்

    23 இயக்குனர்கள்

    தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக சுமார் 23 அறிமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை விஜய்யையே சேரும். மேலும் 3 இசையமைப்பாளர்களையும் இவர் அறிமுகம் செய்திருக்கிறார். 30 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். இதில் விஜய்யின் குரலில் வெளியான பாடல்கள் அனைத்துமே ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    டான்ஸ் மாஸ்டர்களின் ஹீரோ

    டான்ஸ் மாஸ்டர்களின் ஹீரோ

    எவ்வளவு கடினமான நடன அசைவுகளையும் எளிதாக ஆடிவிடுவதால் "டான்ஸ் மாஸ்டர்களின் ஹீரோ" என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு.

    மாஸ் + வசூல் ஹீரோ

    23 வருடங்களில் 58 படங்களைக் கொடுத்திருக்கும் விஜய் தமிழ் சினிமாவின் மாஸ்+ வசூல் ஹீரோக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்களின் இளைய தளபதியாகத் திகழும் விஜய் மேலும் பல ஹிட் படங்களைக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்க்கலாம்.

    English summary
    Vijay Fans Making "The 23 - A Tribute to Ilayathalapathy VIJAY for his 23 Years of Excellence". Now this video Goes on Viral in Social Networks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X