» 

விஜய், முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி 2 வருதாங்கணா?

Posted by:

சென்னை: விஜய், ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இணையும் படம் துப்பாக்கி இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் ஏ.ஆர். முருகதாஸின் துப்பாக்கி படத்தில் நடித்தார். இதையடுத்து இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றவிருக்கிறது. துப்பாக்கியை அடுத்து விஜய் தலைவா, ஜில்லா படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அதில் தலைவா படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது.

ஜில்லா

நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. துப்பாக்கியை அடுத்து இந்த படத்தில் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.

அதிரடி

ஜில்லாவை முடித்த உடன் விஜய் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைத்ததாக தகவல்கள் வந்தன. ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.

துப்பாக்கி 2?

விஜய், முருகதாஸ் மீண்டும் சேர்ந்து பணியாற்றும் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமில்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

See next photo feature article

சமந்தா

விஜய்க்கு ஜோடியாக முருகதாஸின் படத்தில் சமந்தா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Read more about: thuppakki, vijay, ar murugadoss, விஜய், ஏஆர் முருகதாஸ்
English summary
Vijay-AR Murugadoss are joining together again not for the sequel of Thuppakki.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos