twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தாகபூமி' கதை மட்டுமல்ல காட்சிகளையும் திருடிய ஏ.ஆர்.முருகதாஸ்..ஆதாரங்களுடன் களமிறங்கிய அன்பு ராஜசேகர

    By Manjula
    |

    சென்னை: தாகபூமி கதையை மட்டுமின்றி அப்படத்தின் காட்சிகளையும் ஏ.ஆர்.முருகதாஸ் திருடியதை சாட்சிகளுடன், தஞ்சை விவசாயிகள் வெளியிட்டுள்ளனர்.

    கடந்த 2013 ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி. விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இப்படம் 100 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது.

    இப்படம் வெளியான புதிதில் மீஞ்சூர் கோபி என்பவர் அப்படத்தின் கதை தன்னுடையது என்று வழக்குத் தொடர்ந்தார். பின் தஞ்சையைச் சேர்ந்த அன்பு ராஜசேகர் தன்னுடைய தாகபூமி கதையைத் தழுவியே கத்தி எடுக்கப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தார்.

    தாகபூமி

    தாகபூமி

    தஞ்சையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் 'தாகபூமி' என்கிற குறும்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். விளைநிலங்களின் கதியையும், விவசாயிகளின் தற்கொலையையும் மையமாக வைத்து அன்பு ராஜசேகர் இயக்கிய இப்படம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    கதை

    கதை

    ஒரு கிராமத்தின் விளைநிலங்களை பிளாட் போட்டு விற்க ரியல் எஸ்டேட் கம்பெனி ஒன்று முயற்சி செய்கிறது. அந்தக் கிராமத்தின் விவசாயிகளை ஒன்றிணைத்து ஊர்த்தலைவர் இதற்காக கூட்டம் போடுகிறார். மற்ற விவசாயிகள் சம்மதம் தெரிவிக்க, கதாநாயகன் கார்மேகம் மட்டும் இதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். இதனால் மற்ற விவசாயிகள் அவர்மீது கோபம் கொள்கின்றனர். ஊர்த்தலைவர் பதிலுக்கு 3 நாட்களுக்குள் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலோ இல்லை மழை பெய்தாலோ உனது வழிக்கு வருகிறோம் என்று கார்மேகத்திடம் கூறி விடுகிறார்.

    ஒரு முடிவோடு

    ஒரு முடிவோடு

    ஊரிலிருக்கும் மற்றவர்களும் கார்மேகத்திற்கு விளைநிலங்களை விற்க அறிவுரை கூறுகின்றனர். திடீரென மழை பெய்கிறது. ஆனால் அது கனவுதான் என்பதை அவர் புரிந்து கொள்கிறார். இடையில் மக்களின் பள்ளிக்கு சென்று அவள் கேட்ட ஜாமண்ட்ரி பாக்ஸை வாங்கிக் கொடுக்கிறார். டீக்கடைக்கு சென்று பாக்கிப் பணத்தைக் கொடுக்கிறார். தனது கலப்பையை தேடி எடுத்து அதனை சுத்தம் செய்கிறார். எல்லோருடைய நிலங்களும் கைவிட்டுப் போனது கார்மேகத்தின் மனதைப் பிசைகிறது. முடிவில் தன்னுடைய வயலில் கழுத்தை அறுத்துக்கொண்டு அவர் இறந்து போகிறார்.

    தமிழகத்தில் இதுவரை

    தமிழகத்தில் இதுவரை இறந்து போன விவசாயிகளின் பட்டியலுடன் படம் முடிவடைகிறது. 15 நிமிடங்கள் என்றாலும் மிக அற்புதமான படம் என்று தாகபூமியை இதுவரை பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

    கத்தி

    கத்தி

    கத்தி படத்தில் ஒரு பன்னாட்டு குளிர்பானக் கம்பெனிக்கு எதிராக விஜய் போராடுவது போன்று கதை அமைந்திருக்கும்.குளிர்பான கம்பெனி தொடங்கினால் விளைநிலங்களின் தண்ணீர் உறிஞ்சப்படும், எனவே அந்தக் கம்பெனியை தொடங்கவிடக் கூடாது என்று விவசாயிகளுக்காக விஜய் போராடுவார்.

    கார்மேகம் vs ஜீவானந்தம்

    கார்மேகம் vs ஜீவானந்தம்

    தாகபூமி நாயகன் கார்மேகத்தின் கதாபாத்திரத்தை தழுவியே கத்தி ஜீவானந்தம் பாத்திரத்தை முருகதாஸ் உருவாக்கி இருப்பார். முக்கியமாக கார்மேகம் சிவப்புத் துண்டை எப்போதும் அணிந்திருப்பார். இதன்மூலம் அவர் கம்யூனிஸ்ட் என்று மறைமுகமாகக் காட்டுவார்கள். இதில் விஜய் சிவப்புச்சட்டையுடனேயே வலம் வருவார்.

    கத்தி vs தாகபூமி

    கத்தி vs தாகபூமி

    தாகபூமி படத்தில் நாயகன் ஒரு முடிவெடுத்த பின் பணத்தை திருப்பிக் கொடுப்பது, கத்தியை வைத்து கழுத்தை அறுத்துக் கொண்டு சாவது,

    நாயகன் கலப்பையைத் தூக்கிக்கொண்டு வருவது, விவசாயிகளின் தற்கொலை பற்றிய புள்ளிவிவரம்(இதில் விஜய் பேசுவது போன்று இருக்கும்), நாயகனுக்கு நிபந்தனை விதிக்கப்படுவது, விவசாயத்தில் உள்ள குறைகள், தண்ணீர் வரும் என நாயகன் நம்பிக்கை கொடுப்பது என தாகபூமியின் அப்பட்ட காப்பியாகவே கத்தி மிளிர்கிறது.

    2 வருடங்களுக்கும் மேலாக

    2 வருடங்களுக்கும் மேலாக

    தொடர்ந்து அன்பு ராஜசேகருக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது படத்தின் காட்சிகளை கையிலெடுத்து மீண்டும் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். தெறி வெளியாகும் சூழ்நிலையில் ஏ.ஆர்.முருகதாசைக் கைது செய்ய வேண்டும், தெறிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் நேற்றுமுதல் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்து வருகிறது.

    உதவி இயக்குநராக

    உதவி இயக்குநராக

    ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு உதவி இயக்குநர்கள் தேவை என்று சமூக வலைத்தளத்தில் கடந்த 2013 ம் ஆண்டு கேட்டிருந்தார். அதனைப் பார்த்த அன்பு ராஜசேகர் தன்னைப் பற்றிய முழு விவரங்களுடன், 'தாக பூமி' படத்தின் லிங்கையும் அவருக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Anbu Rajashekar had filed a case in Thanjavur last year against the Kaththi producers, director AR Murugadoss and Vijay. He alleged that Kaththi’s script was originally his.Rajashekar claims that he made Dhaaga Bhoomi (Thirsty Earth) and this was translated onto the big screen as Kaththi. In the petition he named AR Murugadoss, Vijay, Ayngaran Karunakaran and Lyca Subashkara. Now The Village People's Request Arrest A.R.Murugadoss and Banned Vijay's Upcoming Movie Theri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X