»   »  தெறி: அடுத்தடுத்து பாடல்களை வெளியிட்டு...ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

தெறி: அடுத்தடுத்து பாடல்களை வெளியிட்டு...ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி பாடலை நள்ளிரவில் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று மாலை சத்யம் திரையரங்கில் நடைபெறுகிறது.


இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களை ஒவ்வொன்றாக, நடிகர் விஜய் வெளியிட்டு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.


ஜித்து ஜில்லாடி

நேற்று இரவு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி' பாடலை வரிகளுடன் இணையத்தில் வெளியிட்டார். இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


 


 


என் ஜீவன்

தொடர்ந்து விஜய் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'என் ஜீவன்' பாடலின் வரிகளை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். விஜய்-சமந்தா இருவருக்குமான ரொமாண்டிக் பாடலாக என் ஜீவன் பாடல் உருவாகி இருக்கிறது.


ஈனா மீனா டீகா

விஜய்-நைனிகா இருவருக்கும் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் ஈனா மீனா டீகா பாடல் அமைந்திருக்கிறது. இப்படத்தின் பாடல் வரிகளையும் விஜய் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


செல்லாக்குட்டி

விஜய்யின் குரலில் உருவாகியிருக்கும் செல்லாக்குட்டி பாடலின் வரிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப்பாடல் தங்களைக் கவர்ந்திருப்பதாக விஜய் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.


ராங்கு

இப்படத்தின் ராங்கு பாடலையும் விஜய் வெளியிட்டிருக்கிறார். அடுத்தடுத்து வெளியான பாடல்களால், தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருகின்றனர்.


 


 


டிரெய்லர்

தாய்மை படத்தின் பாடல் வரிகள் தற்போது வீடியோவுடன் வெளியாகியுள்ளது.படத்தின் 2 நிமிட டிரெய்லரை மாலை நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில், படக்குழு வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


English summary
Vijay's Theri Songs now Released with Lyrics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos