»   »  நானா.. சின்ன தலயா... அய்யய்யோ வேணாம்பா!- விஜய் சேதுபதி

நானா.. சின்ன தலயா... அய்யய்யோ வேணாம்பா!- விஜய் சேதுபதி

Posted by:
Subscribe to Oneindia Tamil

ரசிகர்கள் தன்னை சின்ன தல என்று விளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும்.. தல என்றால் அது அஜீத் மட்டும்தான் என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. 2015ன் ஆரம்பத்தில் சில சறுக்கல்களைச் சந்தித்த அவர், நானும் ரவுடிதான், சேதுபதி என தொடர்ந்து இரு ஹிட்களைக் கொடுத்தார்.

Vijay Sethupathy refuses to accept Chinna Thala title

நேற்று வெளியான காதலும் கடந்து போகும் படமும் நல்ல பெயரைப் பெற்றுள்ளது.

சேதுபதி படம் வெளியான போது விஜய் சேதுபதிக்கு சின்னத் தல என்று பட்டப் பெயரிட்டு பேனர்கள் வைத்தனர் அவரது ரசிகர்கள்.

இதைப் பார்த்த இயக்குநர் சீனு ராமசாமி, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி என்று புதிய பட்டப்பெயர் சூட்டினார்.

ஆனாலும் காதலும் கடந்து போகும் பட விளம்பரங்களில் எந்த அடைமொழியும் இல்லாமல் வெறும் விஜய் சேதுபதியாகவே அவர் வந்தார்.

இந்நிலையில் அவரிடம், 'ரசிகர்கள் சூட்டிய சின்ன தல' பட்டப் பெயரை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "தல என்றால் அது அஜீத்தான். இதில் சின்ன தல, பெரிய தல என்றெல்லாம் யாருமில்லை. என்னை அப்படி அழைப்பதையும் நான் விரும்பவில்லை. எப்போதும் நான் விஜய் சேதுபதிதான்," என்றார்.

English summary
Actor Vijay Sethupathy refused to accept the title 'Chinna Thala' offered by his fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos