»   »  இரு முகன்... இதுதான் விக்ரம் - ஆனந்த் சங்கர் படத்தின் தலைப்பு!

இரு முகன்... இதுதான் விக்ரம் - ஆனந்த் சங்கர் படத்தின் தலைப்பு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் - ஆனந்த் சங்கர் இணையும் புதிய படத்துக்கு இரு முகன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

விக்ரம் நடிப்பில் வெளியான சமீபத்திய படம் பத்து எண்றதுக்குள்ள போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதற்கு முன் அவர் நடித்த ஐ படமும் கடும் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது.


கட்டாயம் ஒரு ஹிட்... அதுவும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விக்ரம்.


எனவே அரிமா நம்பி படம் தந்த ஆனந்த் சங்கருடன் இப்போது கைகோர்த்துள்ளார்.


இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சமீபகாலமாக நடைபெற்று வந்தது.


நயன்தாரா

நயன்தாரா

இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகினர். இதையடுத்து, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர்.


இரு முகன்

இரு முகன்

இதற்கிடையில் இப்படத்திற்கான தலைப்பையும் படக்குழுவினர் தேர்வு செய்து வந்தனர். ஏகப்பட்ட தலைப்புகளை யோசித்து வந்தவர்கள், இப்போது ‘இருமுகன்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.


விஞ்ஞானப் படமா?

விஞ்ஞானப் படமா?

பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து இந்த படம் எந்த மாதிரியானது என்பதை யூகிப்பதே மிகவும் கடினமாக உள்ளது. விஞ்ஞானப் படமா பேன்டசி படமா என யோசிக்க வைத்துவிட்டனர்.


ஷூட்டிங்

ஷூட்டிங்

இன்று முதல் ‘இருமுகன்' படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டருக்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருவது விக்ரமுக்கு ஆறுதலாக அமைந்திருக்கிறது!


English summary
Vikram's Anand Shankar directorial venture has been titled as Iru Mugan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos