»   »  கோபக்கார விக்ராந்த்தின் ரொமான்ஸ் கதை பிறவி!

கோபக்கார விக்ராந்த்தின் ரொமான்ஸ் கதை பிறவி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

இந்தப் பையன் ஏன் எப்ப பார்த்தாலும் இப்படி கோபமாவே இருக்காப்ல... இது விக்ராந்தை பார்த்து பெரும்பாலோனோர் கேட்கும் கேள்வி. கோபமா இருந்தாலும் நல்லாத்தானே இருக்கார் இது அதற்கான பதிலாக இருக்கிறது. விக்ராந்திற்கு இப்போதுதான் ஆக்சனும் ரொமான்ஸ்சும் கலந்த கதை கிடைத்துள்ளது பிறவி படம் மூலம்.

நடிகர் விஜய்யின் ஒன்று விட்ட தம்பியான விக்ராந்திற்கு தமிழ் சினிமாவில் இன்னமும் சரியான பிரேக் கிடைக்கவில்லை. விஷாலின் பாண்டியநாடு படத்தில் சின்ன கேரக்டர் என்றாலும் நல்ல பெயர் கிடைத்தது.

நட்சத்திர கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்த விக்ராந்த், "பிறவி' படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் இப்படத்தை இயக்குகிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் மறுபிறவி எடுக்கலாம் என்று முயற்சித்துள்ளார் விக்ராந்த்.

பிறவி தலைப்பு ஏன்?

"ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வுதான் கதை. அதை குறிக்கும் விதத்தில்தான் "பிறவி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

அண்ணனின் படத்தில்

இது அண்ணனின் முதல் படம் அதில் பங்கெடுப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் விக்ராந்த். இது வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆக்ஷன்-ரொமான்ஸ்

திரில்லர், ஆக்ஷன், காதல், ரொமான்ஸ் என அனைத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். நிறைய கோபம் கொஞ்சம் ரொமான்ஸ் என படத்தில் கலக்கியுள்ளாராம் விக்ராந்த்

 

 

இரண்டு ஹீரோக்கள்

இது இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் விக்ராந்த் உடன் மற்றொரு கதாநாயகனாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் உதவியாளர் அரவிந்த் நடிக்கிறார்.

 

 

கலர்ஃபுல் நாயகிகள்

பிறவியில் விக்ராந்துடன், அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், லீமா, அபிநயா, பார்வதி நிர்பன், அருள்தாஸ், சரித்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

 

 

அபிநயா - அர்விந்த்

நாடோடிகள் படத்தில் நடித்த அபிநயாவிற்கு பிறவியில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளதாம். அர்விந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் அபிநயா.

அடுத்த கட்ட பயணம்

என் திரை பயணத்தில் அடுத்தகட்ட இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லும் படமாக இது இருக்கும். திரைக்கதை அமைப்பில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் விக்ராந்த்.

விக்ராந்தின் நம்பிக்கை

சினிமா பயணத்தில் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறேன். அதற்கான ஆரம்ப புள்ளியாக இது அமையும் என நம்பிக்கையாகக் காத்திருக்கிறேன்'' என்றார் விக்ராந்த்.

நல்ல நண்பர்கள்

பிறவி படத்தில் விக்ராந்தின் நண்பர்கள் ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகியோர் இதில் ஆட்டம் போட்டுள்ளனராம். இந்தப்படம் விக்ராந்திற்கு எதிர்பார்த்த திருப்பத்தை தரும் என்கின்றனர் இவர்கள் மூவரும்.

English summary
Piravi is an Tamil Movie. Starring Vikranth, Parvathi and Leema in the Lead Role. Music Composed by Jakes Bejoy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos