»   »  சுசீந்திரனின் வில் அம்பு 'வச்ச குறி தப்பல'... பாராட்டும் ரசிகர்கள்

சுசீந்திரனின் வில் அம்பு 'வச்ச குறி தப்பல'... பாராட்டும் ரசிகர்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், சிருஷ்டி டாங்கே மற்றும் சாந்தினி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வில் அம்பு.

ரமேஷ் சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு 'கல்யாண சமையல் சாதம்' புகழ் நவீன் இசையமைத்திருக்கிறார்.


சுசீந்திரன் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் வில் அம்பு ரசிகர்கள் மனதில் குறி தவறாமல் பாய்ந்ததா? என்று பார்க்கலாம்.


விதியின் விளையாட்டு

"இரண்டு வெவ்வேறு கதைகள் ,கிளைமேக்ஸ் ஒரே இடத்தில். விதியின் விளையாட்டு ஓகே" என்று கூறி படத்திற்கு 2.5/5 மதிப்பெண் அளித்திருக்கிறார் சரவணன்.
சிறந்த படம்

"வில் அம்பு மிகச்சிறந்த படம். என்ன ஒரு திரைக்கதை, ஹரிஷ், ஸ்ரீ இருவரின் நடிப்பும் அருமை. எல்லோருக்கும் பாராட்டுக்கள். பாடல்கள் மற்றும் பின்னணி இசை உண்மையிலேயே அருமை" என்று பாராட்டி இருக்கிறார் பிரேம் குமார்.
சிருஷ்டி டாங்கே

"வில் அம்பு ஒரு பூரணமான படம். திரையரங்கில் தாராளமாக சென்று பார்க்கலாம். சிருஷ்டி டாங்கேவின் நடிப்பு என்னை முழுவதும் ஈர்த்து விட்டது" என்று ட்வீட் செய்திருக்கிறார் ஆதி.


செமையா இருக்கு

"ஹரிஷ் சகோதரா! வில் அம்பு செமையா இருக்கு. எஸ்டிஆர் ரசிகர்களோட ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும்" என்று கூறி 4/5 மதிப்பெண் அளித்திருக்கிறார் கெட்டவன்.


மொத்தத்தில் வில் அம்பு திரைப்படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.English summary
Sri, Harish Kalyan, Srushti Dange Starrer Vil Ambu Today Released Worldwide, Written& Directed by Ramesh Subramaniyam - Live Audience Response.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos